பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இதுதான் திராவிடநாடு

உலகெங்குமே தமிழினத்துடன் தொடர்புடைய ஒரு பழம்பேரினம் பரவியிருந்ததென்றும், மற்ற உலகப் பகுதிகளில் அது பின்வந்த பல இனங்களுடன் கலந்துவிட்டாலும், கிட்டத்தட்டத் தனிப் பண்புடன் தென்னாட்டில் இன்றுவரை உயிர் வளர்ச்சிபெற்று வருகிறதென்றும் தெரிவிக்கிறார்.

மொழிப்பண்பிலும் வானூல், உழவு, நெசவு, கரும்பாலைத் தொழில், இரும்பு, கனிச்சுரங்கத் தொழில், சிற்பம் ஆகியவற்றிலும் இன்றைய மனித நாகரிகம் தொடங்கு முன்பே தமிழினத்தவர் இக்கால உலகம் வியந்து மூக்கில் கை வைக்கும் உயர் வளம் பெற்றிருந்தனர் என்று கில்பர்ட் ஸ்லேட்டர் என்பார் ‘இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு' என்ற நூலில் குறித்துள்ளார்.

இவ்வாறு பண்டைப் பழங்காலத்திலிருந்தே வாழ்ந்த மாநிலம், நாகரிகம் தோற்றுவித்து வளர்த்து, உலகில் பண்பும் கலையும் பரப்பி வழிகாட்டி உலகாண்ட நாடு திராவிடம். இன்னும் உலகாள, உலகின் மறுமலர்ச்சி தூண்டிப் புத்துலகம் ஆக்க, புதுவாழ்வு காணத்துடிக்கும் மறுமலர்ச்சி, புது மலர்ச்சிக் கனவுகளைத் தன்னுள் கருநிலையில் அடக்கிக்கொண்டிருக்கின்ற நாடு அது. ஆனால் தற்போது அது பண்டைப் பெருமையும் இழந்து புதுப்பெருமை அடைவதற்கும் முடியாதபடி விடுதலை தவறிக்கெட்டு, பெயரிழந்து பண்பிழந்து கையும், காலும் கட்டப்பட்டு, மயக்க மருந்துக்கும் நச்சுக் குழல்களுக்கும் ஆட்பட்டு நலியும் நிலையில் உள்ள நிலமாகக் காட்சியளிக்கிறது.

வரலாறு அறிந்தவர்கள் வாய்விட்டு அலறக் கூடும். வருங்காலம் அவாவுபவர்கள், உலகவளம் காணத்துடிக்கும் நல்லோர் அங்கலாய்க்கக்கூடும். ஆனால் திராவிடத்தின் இந்நிலை மாறவேண்டுமானால்,