பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிடநாடு

25

வர்ஷமாகிய அதையே மனிதஇனம் வாழும் முழு நிலவுலகமாக, உப்புக்கடல் சூழ்ந்த நிலவலயத்தீவமாக மிகப் பழம்புராணங்கள் கற்பனை செய்துள்ளன. மற்ற நிலவலயத்தீவங்கள் அல்லது உலகங்கள் ஆறும் பால்கடலாலும், தயிர்க்கடல், நெய்க்கடல்களாலும் சூழப்பட்டவை-இயக்கர், கந்தருவர், கின்னரர், தேவர் வாழ்பவையாம்!

திராவிட நாட்டுக்கு இயற்கை எல்லைகள் உண்டு. மூன்றுபுறம் கடல். ஒருபுறம், வடக்கே, விந்திய மலையும் நடுமேட்டு நிலமும் அவற்றின் கடக்கமுடியாக் காடுகளும் நிலவுகின்றன. இன்றைய இருப்புப் பாதைகள்கூட இவ்வெல்லையை இரு கோடிகளிலும்தான் ஓரளவு ஊடுருவிச் செல்கின்றன. நேர்மாறாக இந்திய மாநிலத்துக்கு இம்மாதிரி எல்லைகள் திராவிட நாட்டுக்கமைந்த எல்லையன்றி வேறு கிடையாது. ஏனெனில் திராவிடத்தையும் அப்பரப்பில் சேர்த்துக்கொண்டால்தான் திராவிடத்தின் முப்புற எல்லையாகிய கடல் அதற்கும் எல்லையாக முடியும். இல்லாவிட்டால் திராவிடத்தின் வடஎல்லையே, அதன் தென்எல்லை. வடதிசையில் இமயத்தை அதன் எல்லையாகப் பெருமிதத்துடன் பலர் குறிப்பதுண்டு. ஆனால் அது நேபாளம், பூட்டாணம் ஆகிய நாடுகளுக்கும் எல்லை. இமயத்தின் தெற்கிலுள்ள இந்த நாடுகளும், வடக்கிலுள்ள திபெத்தும் ஓரின நாகரிகத் தொடர்புடையவை. கிழக்கிலோ பர்மா எங்கு தொடங்குகிறது, இந்தியா எங்கு முடிகிறது, என்று கூறமுடியாது. வெள்ளையர் இட்ட கோடுதான் அங்கே எல்லை. கிழக்குப் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் உள்ள எல்லையோ வெள்ளையரும், வெள்ளையர் காலக் காங்கிரஸ் இந்துத் தலைவர்களும் குருதிப் போரிட்டுப் பேரம்செய்து வெட்டிச் செதுக்கிய கோடேயாகும். மேற்குத் திசையிலும்2