பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்து ே

முத்து ே

138

(ஆத்திரத்துடன்) மாமா, என்ன சொன் னிங்க? அன்புப் பூரணிக்கா தன்ளுேட அப்பன் பேர் தெரியாதின் னு சொல்லுறீங்க? உங்க அருமைத் திருமகள் பவளக்கொடிக்கே தன் அப்பன் பேர் தெரியறப்போ, பூரணிக்கு மட்டும் தன் அப்பன் பெயர் தெரியாமல் போய்விடுமா? மாமா ... கண்ணைத் திறந்து பாருங்க பூரணியைத் தன் அப்பன்பேரைச் சொல்லச் சொல்லட்டுமா? கேட்டுக்கிடுறீங் களா?...(பூரணியை நோக்கி) பூரணி, உன் அப்பன் பேரை ஒரு வாட்டி மட்டும் இந்தப் புண் ணியவான் கிட்டே சொல்லிப்பிடு, பூரணி !

கொஞ்சுகிருன் முத்து.

பூரணியோ, தன் தாயை ஏக்கத்துடன் பார்த்து விட்டு, முடியாது’ என்கிற பாவனையில் தலையை ஆட்டுகிருள்.

வையாபுரி அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டே, அக்கினிச் சட்டி எடுத்து ஆடுகிறார்,

(சூளுரையாக) ஊம், ஆடுங்க, வையாபுரிச் சேர்வைகாரரே !.--நல்லா ஆடுங்க இன்னிக்கு இல்லாட்டியும், என்னிக்காச்சும் ஒருநாளைக்கு இதே பூரணி, உங்க திருச்சந்நிதானத்

திலேயும் இந்த மாங்குடிச் சமுதாயத்தின் முன்னிலையிலேயும் தன் அப்பன் பேரை அம் பலப் படுத்தாமல் தப்பாது என்கிற சங்கதியை நெஞ்சிலே முடிச்சுப் போட்டு வச்சுக்கிட்டு ஆடுங்க!...