பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 Í

மெய்யாலுமே, நீங்க உப்புப் போட்டுக் சஞ்சி குடிச்சிருந்தால் - மெய்யாலுமே ஆண்மை கொண்ட ஆண் பிள்ளையாய் இருந்திருந்தால் என்ைேட மானத்தை, நீங்க காளி சந்நதியிலே தொட்டுத் தாலி கட்டின என்னுேட மானத்தை ரோசத்தோட காப்பாற்றியிருக்க மாட்டீங்களா? என்பேரிலே வீண்பழி விழக் காரணமாயிருந்த நீங்களே அந்தப் பழியைத் துடைச்சு வீச மனம் துணிஞ்சிருக்க மாட்டீங்களா?...உங் களுக்கு உங்க பவளக்கொடி மட்டும்தான் மகளா? பூரணி-நம்ப பூரணி உங்களுக்கு மகள் இல்லையா?...வறட்டுச் சம்பத்துக்கும், பொய் வாழ்க்கைக்கும், போலித்தனமான கவுரவத்துக்கும் அடிமையாகி, உங்க மனச் சாட்சியையும் அடிமைப் படுத்திக்கிட்ட கொடும் பாவியான நீங்களா என்கிட்டே சவால் போடுறீங்க?...நான் வீரத் தமிழச்சி ! பண்புத் தமிழச்சி ! - இந்த மீனுட்சி நினைச்சால், பொழுது விடியற துக்குள்ளே, உங்க பேராசை யிலே மண்ணைத் துரவிட்டு, என் மகள் பூரணிக்கும் உங்க அக்கா மகன் முத்துவுக்கும் கண்ணுலம் பண்ணி வச்சுப்புடுவேனுக்கும் !...

பயங்க ப் பின்னணி வீரமுழக்கம் செய் கிறது !

மீனுட்சிக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது ! -

ஆல்ை, வையாபுரிக்கோ மூச்சே கின்று விடும் போலிருக்கிறது ! x