பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூரணி :

மீனாட்சி :

20

தன் வாயை அடைச்சுக்கினு வேடிக்கை பார்க் கிருளே, பூரணி... சரி, சரி. நடந்ததைத் தான் சொல்லேன் !

மகளின் கண்ணிரைத் துடைத்து விடு கிருள் தாய்.

ஆத்தா நான் செண்பகம் குந்தியிருந்த மணவறைப் பந்தலிலே அடியெடுத்து வச்சது தான் தாமதம், உடனே மேளமும் பீப்பீயும் நின்னிடுச்சு ; அய்யர்சாமி ஒதின மந்திரமும் ஒய்ஞ்சிடுச்சு ; கூடியிருந்தவங்க எல்லாரும் ஏந்திருச்சிட்டாங்க ... என் ஒருத்தியாலே செண்பகப் பொண்ணு கண்ணுலம் தடைப்படப் படாதேன்னு ஒடியாந்திட்டேன். செண்பகம் கெஞ்சிச்சு; அப்பாலே, யாரோ ஒரு நல்ல இளவட்டமும் என்னைத் தடுத்துச்சு ... ஆன, நான் ஒடியாந்திட்டேன், ஆத்தா அந்த இளவட்டத்தோட அப்பன் வாய்க்கு வந்தபடி நம்பளை ஏசிப் பேசிப்புட்டாரே, ஆத்தா ?

(வீரிட்டு) காளி ஆத்தா ... காளி ஆத்தா ...

தாயின் கண்ணிரை மகள் இப்போது துடைத்து விடுகின்றாள்.

(எரிச்சலுடன்) அவதான் பாவம், கல்லாகிப் போயிட்டாளே, ஆத்தா ? - -

£3Iti ! ..

பெருமூச்செ றிகிறள் மிகுட்சி.