பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

வியை எப்படியாச்சும் இந்த மண்ணுக்குக் கொண்டாந்து சேர்த்து, அந்தப் பாவியின் முகமூடிகைக் கிழிச்சு அவன் சுயரூபத்தை அம் பலப்படுத்திடு. அப்பத்தான், மீனுட்சி பேரிலே இந்த ஊர் சுமத்தியிருக்கிற அநியாயப் பழி விலகும் ! அப்பத்தான் நீ வெறும் கல் இல்லே என்கிற உண்மையும் இந்த ஊருக்கு விளங் கும் சத்தியத்தையும் நீதியையும் தர்மத்தை யும் பிழைக்க வைக்க வேண்டியது உன் சமு தாயக் கடமை என்கிற உண்மையை மறந்துப் புடாதே, ஆத்தர !...இந்த உண்மையை நீ மறந்தாயோ, அப்பாலே இந்த ஊரே உன்னை மறந்துப்பிடும் 1 ஆமா. சொல்லிப்பீட்டேன், தாயே 1...

உணர்ச்சி வசப்பட்டுப் பேசி முடித்த முத்து, கைகுவித்து, வணங்குகிறன்.

ஆலய மணிச் சத்தம் கேட்கிறது. திரும்பிப் பார்க்கிருன் முத்து.

அங்கே, மீனுட்சியும் பூரணியும் அம் மனைச் சேவித்த வண்ணம் நிற்கிறார்கள். பூரணியை ஏக்கமும் அன்பும் சூழ்ந்திட ஒருகணம் ஊடுருவிப் பார்த்தபின், புறப் படுகிருன் முத்து.

திரை