பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/106

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

யமோ வேதங்கள், உபநிஷதங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள் மூலமாக நமக்கு விளக்கப்பட்டிருக்கின்றது. வேத காலத்திலே கடவுளர்களுக்கெல்லாம் விக்கிரகங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன. வேத காலத்துக்கு முந்திய சிந்துவெளி நாகரிகத்தில் கூட சுட்ட மண்ணில் உருவங்களும், கல்லால் ஆக்கிய முத்திரைகளும் இருக்கின்றன என்றும், அவைகளில் மரங்களும், விலங்குகளும் ஏன், நாகங்களும் கூடப் பொறிக்கப்பட்டிருந்தன என்றும் அறிகிறோம்.

வேத காலத்திற்குப் பின் மேல் நாட்டிலே கிரேக்கர்களது கலையும், நாகரிகமும் உச்சஸ்தானத்தில் இருக்கும்போது, இந்தியாவிலும் மகத நாட்டரசர் சந்திரகுப்த மெளரியச் சக்கரவர்த்தி, அவருடைய பேரன் அசோகர் எல்லோரும் சிற்பக் கலையை வளர்ப்பதில் சிறந்த ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். இன்று இந்திய சாம்ராஜ்யத்தின் சின்னமாக விளங்கும் அசோக சக்கரமும், சிம்ம முத்திரையுமே சிற்பக் கலைக்கு விஷயத்தை எப்படித் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் அந்தக் காலத்து அரசர்களும், சிற்பிகளும் என்பதை விளக்குகின்றன அல்லவா?

இந்தியச் சிற்பங்களுக்கு விஷயம், முக்கியமாக தெய்வ விக்கிரகங்களாகவும் அவைகளுக்கு உரிய நிலையங்களாகவும் இருந்திருக்கின்றன. இந்துக்கள், பெளத்தர்கள், ஜைனர்கள் எல்லோரும் அவரவர் வணங்கும் மூர்த்திகளையும் அம்மூர்த்திகளுக்கு உரிய ஸ்தூபங்களையும் கல்லாலும் மண்ணாலும் கட்டியிருக்கிறார்கள். இப்படிக் கட்டிய ஸ்தூபங்களில் முதன்மையானது பெளத்தர்கள் நிர்மாணித்த பர்ஹுத் ஸ்தூபாதான். அந்த ஸ்தூபாவில் உள்ள கல் கிராதிகளில் செய்துள்ள நுணுக்க வேலைப்பாடு அதி

103