பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்


தியானித்துத்தான் உலகம் யாவையும் ஆக்கி நிலைபெற நிறுத்தி அழிக்கும் இறைவனைக் கற்பனை பண்ணியிருக்கிறார்கள். கற்பனையில் உருவான கடவுளுக்குப் பலப்பல உருவங்கள் அமைத்திருக்கிறார்கள். சமயச் சார்புடன் அழகுணர்ச்சியும் அவர்களுக்குத் துணை புரிந்திருக்கிறது. உணர்ச்சிவசப்பட்டவனாய் இருந்த சிற்பி உணர்ச்சியின் வடிவங்களாகத் திருவுருவங்களை அமைத்திருக்கிறான். சமயத்துடன் உணர்ச்சியும் சேர்ந்து எத்தனை எத்தனையோ ரஸபாவங்களை உருவாக்கியிருக்கின்றன. எண்ணற்ற தெய்வ வடிவங்கள் இந்துக்களின் கோயில்களில் இடம்பெற்றிருக்கின்றன.

ஆனந்தம் ஆடரங்கு
ஆனநதம் பாடலகள்
ஆனந்தம் பல்லியம்
ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தமாக
அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக்
கூத்துக் கந்தானுக்கே!

என்று திருமூலர் பாடியபடி ஆனந்த வெறியிலே, உணர்ச்சியிலே உருவானதுதான் நடராஜனது சிலை விக்கிரகம். ஆம், சமயம் சாஸ்திரம் கலை எல்லாம் ஒன்றுகூடும் ஒரு நிலையமாக நடராஜ விக்கிரகம் என்றும் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது நம்மிடையே.

தெய்வீக உருவங்களை உருவாக்க ராமாயண, பாரத இதிகாசங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. இதிகாசங்களிலே வருகின்ற வீரர்கள் எல்லாம் தெய்

105