பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

னர், வெட்டியான் தலையாரிகளுடன். வெண்காடர் கோயில் நிர்வாகிகள் வந்தார்கள் கொட்டு முழக்கத்துடன். விக்ரகங்கள் எல்லாம் முதலில் கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு அதன்பின் சீர்காழி கஜானாவை நோக்கி நடந்தன. பின்னர் அவை தஞ்சை ஜில்லாவின் ஹுசூர் கஜானாவில் பத்திரமாகப் பாதுகாப்பில் அடைந்திருக்கின்றன.

திருவெண்காடு சீர்காழிக்குத் தென் கிழக்கில் ஏழு எட்டு மைல் தூரத்தில் உள்ள சிறிய ஊர். அது பட்டினத்தடிகளின் பிறந்த ஊர் என்பது பிரசித்தம். சரித்திரப் பிரசித்தியும், இலக்கியப் பிரசித்தியும் பெற்ற காவிரிப்பூம்பட்டினமும் இந்த ஊரை அடுத்ததுதான். அங்குள்ள ஆலயத்தில் கோயில் கொண்டிருக்கும் வெண்காடர் - அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடப்பெற்றவர். வெண்காடரைவிடப் பெருமை உடையவர் அங்குள்ள அகோரசிவம். இதற்கும் மேல் பிரசித்தி உடையது கோயிலுக்குள் இருக்கும் சோம, சூர்ய, அக்னி தீர்த்தங்கள்.

வெண்காட்டு முக்குள நீர் தோய் வினையார்
அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே

என்றல்லவா பாடியிருக்கிறார் சம்பந்தர்.

இப்படிப்பட்ட ஒரு பாடல் பெற்ற க்ஷேத்திரத்திலிருந்துதான் இந்தச் செப்பு விக்கிரகங்கள் கிடைத்திருக்கின்றன. இவைகளில் மிகவும் முக்கியமானவை, நல்ல கலாரசனையுடன் உருவானவை என்று நான் கருதுவது கல்யாணசுந்தரர் திருக்கோலம்தான். சிவபெருமானும், பார்வதியும் அவர்களைத் தாங்கி நிற்கின்ற பீடமும் ஒரே வார்ப்பால் உருவானவை. பார்வ

123