பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்


கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்

என்று மார் தட்டியிருக்கிறான். உண்மையில் இப்படி வியாபாரத் துறையில், பொருளாதாரத் துறையில் ஒரு பரிவர்த்தனை ஏற்பட்டுவிட்டால் மக்களிடையே நல்லுறவு வளர்ந்துவிடுமா? என்று சிந்திக்கிறான். சிந்திக்கச் சிந்திக்க அவனுக்கு தோன்றியிருக்கிறது இப்படிப்பட்ட வியாபாரப் பரிவர்த்தனையால் மட்டும் நல்லுறவு வளர்ந்துவிடாது என்று.

உடனே தாம் செய்த தவறை எண்ணி விரலைக் கடித்திருக்கிறான். மறுபடியும் சிந்தித்திருக்கிறான். உண்மை விளங்கியிருக்கிறது. வியாபாரத்தாலோ, இல்லை மற்றைய பொருளாதார முறையாலோ வளராத நல்லுறவை, கலை மூலம் வளர்த்துவிடலாம் என்று கண்டிருக்கிறான். அப்போது வந்திருக்கிறது பாட்டு அவனுக்கு.

சிங்கம் மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்

என்று உற்சாகமாகவே பாடியிருக்கிறான். கங்கை நதிப்புறத்து கோதுமையையும், காவிரி வெற்றிலையையும், பரிவர்த்தனை பண்ணி வளர்க்க முடியாத நல்லுறவை, சேர நாட்டுத் தந்தச் சிற்பங்களையும், மராட்டியரது கவிதைக் கனிகளையும் பரிவர்த்தனை செய்து வளர்த்துவிடலாம் என்று கண்டிருக்கிறான்.

பாரதி கண்ட கனா அகண்ட பாரதத்தோடு நின்றுவிடுகிறது. வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவதோடும், சிங்களத் தீவுக்கு ஒரு பாலம் அமைப்பதோடும்

130