பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

யாரின் மேல் 17 அடி உயரத்தில் பெருவுடையார் உயர்ந்திருக்கிறார் என்றால் கேட்பானேன். இந்தக் கருவறைக்கு மேலே 216 அடி உயரத்தில் விமானம் உயர்ந்திருக்கிறது. அதனை ராஜராஜன் தட்சிண மேரு என்றே குறிப்பிட்டிருக்கிறான். இக்கோயில் அடி முதல் முடி வரை கல்லாலேயே கட்டப்பட்ட ஒன்று. விமானத்தின் மேல் வைத்திருக்கும் பிரமாந்திர தளக் கல் 25 சதுர அடியும், 80 டன் நிறையும் உடையது என்கிறார்கள். அதன் மேல் 12 அடி உயரமுள்ள பொன் போர்த்த ஸ்தூபி, ‘உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்’ என்று வள்ளுவர் வகுத்த வழி நின்றல்லவர் இக்கலைக் கோயிலை உருவாக்கி இருக்கிறான், ராஜ ராஜன்! கலை உலகில் தமிழன் எவ்வளவு உயர்ந்தவன் என்பதை அல்லவா இக்கோயில் இன்றளவும். பறை சாற்றிக் கொண்டு நிற்கிறது.

இத்தனை விவரங்களையும் நண்பருக்கு எடுத்துச் சொன்னேன். கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் பண்ணித் திரும்பும்போது நண்பர் கேட்டார்: “இறைவனுக்கு என்று இத்தனை பெரிய கோயிலைக் கட்டிய ராஜ ராஜன் தனக்கு என்றும் ஒரு மாளிகை அரண்மனை கட்டியிருக்க வேண்டுமே? அந்த அரண்மனை எங்கிருக்கிறது? அதையும் பார்த்து விடுவோமே” என்றார். நான் அவருக்கு என்ன சொல்ல, எதைக் கொண்டு காட்ட? ராஜ ராஜன் மாத்திரம் என்ன, அவனுக்கு முன்னும் பின்னும் இருந்த சோழ அரசர்களும் தங்களுக்கு என்று ஒரு அரண்மனை கட்டிக் கொள்ளவில்லையே. ஏதோ ராஜ ராஜனது சகோதரர் ஆதித்த கரிகாலன் காஞ்சியில் பொன் மாளிகை ஒன்று கட்டினான் என்றும், அங்குதான் ராஜ

155