பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைக் செல்வம்

கைகளில் ஒன்றிரண்டே இன்று தஞ்சையிலும், மதுரையிலும் நாயக்க மன்னர் மாளிகைகளாகக் காட்சி தருகின்றன. இந்த மாளிகைகளைப் பற்றித் தெரிவதற்கு முன்னாலே நமது பழைய இலக்கியங்களில். சிற்ப சாஸ்திரங்களில் இந்த மாளிகை நிர்மாணத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்தானே?

சங்க இலக்கியங்களைப் புரட்டினால் அங்கெல்லாம் இயற்கை அழகையும், இறைவன் நிறைவையும், ஆடவர் இயல்பையும், மகளிரது. ஒழுக்கத்தையும், அரசர்களது கொடையையும், வீரத்தையும், பெரியோரது சான்றாண்மையையும் குறித்துப் பெரிதும் பேசப்பட்டிருத்தல் காண்போம். மன்னர்களது வாழ்வினைக் குறிக்கும்போது அவர்கள் வாழ்ந்த இடங்களையும் குறித்திருக்கிறார்கள் என்றாலும், பெரிய மாளிகைகளைப் பற்றி விரிந்த விளக்கங்கள் கிடைப்பதில்லை. பஞ்ச காவியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் ஆடகமாடமும், தானிய மாளிகையும் வர்ணிக்கப்படுகிறது. இதில் கூட, ஆடகமாடம் திருவனந்தபுரத்திலுள்ள அனந்த சயனரது கோயிலாகவே இருக்க வேண்டும் என்பர் ஆராய்ச்சியாளர்.

ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த

என்றும்,

ஆடகமாடத்து அரவணை கிடந்தோம்
சேடக்குடும்பியின் சிறுமகள் ஈங்கு உளள்

என்றுமே குறிக்கப்படுகிறது. இவற்றைப் பற்றி எல்

157