பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

தான் கட்டப்பட வேண்டும். நீள அகலம் 500 தண்டங்களுக்கு, அதாவது ஆயிரம் கெஜத்துக்கு மேற்பட்டிருத்தல் கூடாது, கட்டிடத்துக்கு மாடிகள் இருக்கலாம். விசாலமான கூடங்களும், அரண்மனைக் கட்டிடத்திற்கு முன்னாலே அகன்ற முற்றமும், அரண்மனை வாயிலில் ஒரு பெரிய போர்டிகோவும் அமைத்தல் வேண்டும். அரண்மனையின் உள்ளே விசாலமான, பெரிய பெரிய அலங்காரத் தூண்களோடு கூடிய, வரவேற்பு மண்டபம் இருக்க வேண்டும். கல்லிலோ மரத்திலோ அல்லது சுதையிலோ செய்த தூண்களாக இருக்கலாம். அங்கு கண்ணாடிகள், ஆசனங்கள் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டும். சிம்மாசனத்தைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். ஏழு வகை சிம்மாசனங்கள் வர்ணிக்கப்படுகின்றன. சிம்மாசனம், பத்ராசனம், கூர்மாசனம், வீராசனம், மனாசனம், விஜயாசனம், பாண்யாகாசனம் என்பவை அவை. சிம்மாசனத்தின் கைபிடிகள், பிரபாவலி எல்லாம் சிறந்த வேலைப்பாடு உடையனவாக இருத்தல் வேண்டும். அடுத்து முக்கிய கவனம் செலுத்த வேண்டுவது அரண்மனைப் பெண்கள் தங்கும் அந்தப்புரம். அங்கு அமைக்கும் ஜன்னல்கள் எல்லாம் உள்ளேயிருந்து. வெளியே நடக்கும் காரியங்களைப் பார்க்கக் கூடியவைகளாகவும், வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளே இருப்பவர்களைக் காண முடியாத வகையிலும் அமைந்திருக்க வேண்டும். இப்படி ஒன்பது வகை சன்னல்கள் சாளரங்கள் அமைப்பது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. பத்ம பத்ரம், கஜநேத்ரம், கடம், தனுபாதம், மிருசிநேத்ரம், பர்வதம், சுகநாசம், பஹீரந்திரம்,

161

இ.க - 11