பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

தான் எத்தனை எத்தனை வகை. அரண்மனை அமைப்புக்களைப் பற்றி மானசாரம், காஸ்யப், சில்பம், மாய மதம், நாரத சில்ப நூல்கள் விரிவாகக் கூறுகின்றன, அவகாசமுள்ளவர்கள், ஆர்வமுள்ளவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம். அரண்மனையை அடுத்தே வங்கி என்னும் பெயரில் சேனாதிபதியின் மாளிகையும் அமைத்தல் வேண்டும். அரண்மனை வைத்தியர்கள், புரோகிதர்களுக்கும் தனிக் கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும். நியாயஸ்தலம் கூட அரண்மனைக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே இருப்பது நல்லது. ஈசான திசையிலே அரண்மனையைச் சேர்ந்த தனிக் கோயில் எழ வேண்டும். இன்னும் கஜானா, காவற்கூடம், யானை கட்டுந்தறி, குதிரை லாயம், ஏனைய பிறவும் இருத்தல் வேண்டும். இத்தனையையும் சுற்றி ஒரு கோட்டை அக்கோட்டையைச் சுற்றி ஒரு அகழியும் அமைக்க வேண்டும். கோட்டைச் சுவர்கள், வாயில்கள், காவலாளர் தங்குமிடம், அகழியின் பேரில் உயர்த்தவும் தாழ்த்தவும் கூடிய தொங்கு மரப் பாலங்கள் அமைத்தல் எல்லாவற்றைப் பற்றியும் கூறப்பட்டிருக்கின்றன.

அரண்மனைகளைத் தவிர மற்ற மாளிகைகள் கட்டுவதைப் பற்றியும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. சாதாரண மாளிகையை பவனம் என்றும், கொஞ்சம் பெரியதை ஹர்மயம் என்றும் மிகப் பெரியதை பிரசாதம் என்றும் அழைத்திருக்கிறார்கள். தேவப் பிரசாதம் என்றால் கோயில் என்று பொருள்படும் என்பதையும் அறிகிறோம். அரண்மனைகளை விவரித்தது போலவே மாளிகைக் கட்டிட நிர்மாணமும் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனை மாளி

163