பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

யைச் சுற்றிய பிரகாரத்திலே தீட்டியுள்ள சித்திரங்கள் ஏதோ அதிர்ஷ்ட வசத்தால் நமக்குக் காட்சிப் பொருட்களாகக் கிடைத்தன. அச்சித்திரங்களின் சிறப்பை அறியாத யாரோ பின்னால் அவைகளின் பேரில் சுதை பூசித் தங்கள் கைத்திறனைக் காட்டியிருக்கின்றனர். அங்கு உருவாகியிருக்கும் திரிபுராந்தகர் சித்திரம் ஒன்றே பற்பல வடிவங்களை ஒருங்கே இணைத்துச் சித்திரம் தீட்டுவதில் மேல் நாட்டாருக்குத் தமிழர்கள் சளைத்தவர்கள் இல்லை என்று கட்டியம் கூறும். காஞ்சி கைலாசநாதர் கோயில் ஓவியங்கள் எல்லாம் சிதைந்து போய்விட்டன

ஆந்திர நாட்டில் சோம பள்ளி, தாடிப் பத்திரி, ஹம்பி முதலிய இடங்களிலும் சித்திரங்கள் எழுதப்பெற்றிருக்கின்றன, இவை எல்லாம் விஜயநகர காலத்துச் சிற்பங்கள். இப்படி ஓவியக் கலை நாளும் வளர்ந்து பாரத சமுதாயக் கலைகளில் சிறந்ததொரு இடம் பெற்றிருக்கின்றன.

சிற்பம், சித்திரம் முதலிய கலைகளைப் போலவே நடனமும் ஒரு அற்புதக் கலை. மேலை நாடுகளில் எல்லாம் அங்கங்களை அசைப்பதும், குதிப்பதும், கிறுகிறு என்று சுற்றுவதுமே நடனம் என்று எண்ணியிருக்கின்றனர். இந்திய நடனக் கலையோ ஹஸ்த முத்திரைகளிலும், தாளலயங்களிலும் உணர்ச்சிக்கு உருவம் கொடுப்பதிலும் முக்யத்வம் வாய்ந்ததாக இருக்கிறது. வடக்கே மணிபுரி, கதக், யக்ஷகானம் - என்றெல்லாம் உருப்பெற்றிருக்கிறது. தென்னாட்டிலோ குச்சிபுடி, கதகளி, பரத நாட்டியம் என்னும் வகையில் இந்நடனங்கள் சிறப்புற்றி

19