பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

நூற்றுப் பதினாறு (216) அடி உயரம் வளர்ந்திருக்கும் தக்ஷிண மேரு என்னும் விமானத்தைப் பார்க்கும் போது தமிழராகிய நாம் அன்றையத் தமிழன் உருவாக்கிய காம்பீர்யத்தையே உணர்கிறோமே. இந்தக் காம்பீர்யம் அமானுஷ்ய சக்தியினால்தான் உருவாகி இருக்க வேண்டும் என்றும் எண்ணத் தோன்றுகிறதே! இதே அனுபவம்தானே கம்பனது காவியத்தில் காணுகின்ற காம்பீர்யத்தை அனுபவிக்கும் போது நமக்கும் ஏற்படுகிறது!

ஆனால் ஒன்று. கம்பனது காவியம் காம்பீர்யம் உடையது என்று மட்டுந்தானா கூறலாம். இல்லையே! பிரதான சம்பவங்களையும், பாத்திரங்களையும் உருவாக்குவதில் எத்தனை திறமையைக் காட்டினானோ அத்தனை திறமையை அல்லவா சிறு சிறு சம்பவங்களை உருவாக்குவதிலும், சிறு சிறு பாத்திர சிருஷ்டியிலும் காட்டியிருக்கிறான். எப்படி பெரியதொரு கோயிலைக் கட்டுகின்ற கலைஞன், தன் சிற்றுளி வேலையின் நயத்தையெல்லாம் அங்கு வடிக்கும் சிற்ப வடிவங்கள் மூலம் காட்டுகிறானோ, அப்படியல்லவா சிறு சிறு பாத்திர சிருஷ்டியிலும் கதையின் கட்டுக் கோப்பிலும் காட்டுகிறான் கம்பன், ஆம். காவியத்தை உருவாக்கும் போது he has carved like a titan and finished like a jeweller - என்று விமரிசனம் செய்வது பொருத்தமானதுதானே? இதே எண்ணம்தான் மைசூர் ராஜ்யத்திலுள்ள ஹொய்சலர் கோயில்களைப் பார்க்கும்போதும் எனக்கு ஏற்பட்டது. விஸ்தாரமான பிரகாரங்களோடு கோயில்களைக் கட்டுவதுடன் கோயில் சுவர், தூண்கள், வாயில், விதானம் எல்லா இடத்தும் சிறிதும் பெரிதுமான சிற்ப வடிவங்

50