பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

இட். அப்படியானால் - நம்முடைய ஆரிய சங்கேதப்படி அவன் நம்மைச் சார்ந்தவன் என்று சொல்லி, அவனை வசப்படுத்தட்டும் நம்முடைய கெஸ்டப்போ போலீஸ் ! அவனிடம், அவனும் ஒரு ஆரியன், ஆகவே ஜர்மானியர்களுடைய ஆதி வம்சத்தாரும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள், ஆகவே அவன் ஜர்மன் கட்சியைச் சேரவேண்டுமென்று சொல்லட்டும்.

இம்.என்ன முடியுமோ -பார்க்கிறேன்.

இட். உடனே இந்த வேலையை ஆரம்பி! நாம் ஒரு க்ஷணத்தையும் வீண் போக்கலாகாது. உன் மனிதர்களிடம் இதுவே அவர்களுக்கு நான் இட்ட கடைசி கட்டளை என்று தெரிவி. - அந்த மனிதன் மற்றவர்களுக்கு அந்த ரகசியத்தைத் தெரிவிக்குமுன் அவனைப் பிடிக்கவாவது வேண்டும் - அல்லது வான்ஸ்பீ (VonSpee) சென்ற இடத்திற்காவது அவர்கள் விரைவில் போக வேண்டும்! (டெலிபோன் மணி அடிக்கிறது) பாழாய்ப் போக! யார் அது இம்முறை? (குழாயைக் காதில் வைத்து). ஆமாம்-அவன் இங்குதான் இருக்கிறான். அவனிடம் நீ என்ன சொல்ல வேண்டும் ? - யார் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு விட்டது? - வென்ட்வொர்த் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டானாம், இம்லர் !

இம். ஆனால் ஒரு க்ஷணமும் தாமதிக்கலாகாது. வென்ட்வொர்த் அந்த இந்தியனைச் சந்திக்குமுன் நாம் அவனைப் பற்ற வேண்டும் !

(வெளியே ஓடுகிறான்)


காட்சி முடிகிறது.