பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அவருடைய கடிதமும்-உங்களுக்குக் கொடுக்கும்படி சொன்னது இருக்கிறது-அதில் நீங்கள் என்னை பூரணமாய் நம்பலாமென்றிருப்பதைக் காண்பீர்கள் - இவ் விஷயத்தில் நாம் காலஹரணம் செய்வதற்கில்லை - (தன் இரு கைகளையும் தன் கோட்டின் பைகளுக்குள் நுழைத்து ஒன்றிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துக்கொடுக்கிறான் - தன் இடதுகையால்; விஸ்வநாதன் அதைப் பிரிக்கிறான்)

வி. இது வென்ட்வொர்க் கையெழுத்தல்லவே !

கி. (மற்றொரு கையால், ஒரு கைத் துப்பாக்கியை திடீரென்று வெளியில் எடுத்து) தூக்கு கைகளை உயர ! இல்லாவிட்டால் நான் சுடுவேன்! (விஸ்வநாதன் தன் இரு கரங்களையும் உயரத் தூக்குகிறான்) அதுதான் சரி !- இப்பொழுது நான் சொல்வதைக் கேள் - ஏதாவது கூச்சல் கீச்சல் போட்டாயோ உடனே என் துப்பாக்கியால் சுட்டு உன் மூளையைச் சிதறடிப்தேன்!
(ஹர்மன் ஆங்கில ராணுவ உடையில் வருகிறான்)

நாஜிகளின் வழக்கப்படி கில்லிங்காமை வணங்குகிறான்.

ஹ. உத்தரவுகள் நிறைவேற்றப்பட்டன.

கி. எல்லாம் சரியாகிவிட்டதா ?

ஹ. நிரம்ப சரி.

கி. இப்பொழுது இந்த பெரிய மனிதரின் கைகளிரண்டையும் அவரிருக்கும் நாற்காலியில் சேர்த்துக் கட்டு -அவருக்கு நோகாதிருக்கும்படி !- (ஹர்மன் அப்படியே செய்கிறான்) இனி எமது கொடுக்கல் வாங்கல் வியாபாரத்தை சீக்கிரம் முடிப்போம் - இதோ கவனி - விஸ்வம் - நான் சுருக்கமாய்ச் சொல்கிறேன். ஐந்து நிமிஷத்தில் நீ கண்டுபிடித்திருக்கும் இந்த ரகசியத்தை என்னிடம் சொல். - ஒன்றும் ஒளியாமல் - இப்படிச் செய்தால், உன் உயிரையும் காப்பாற்றுவேன் - உன்னையும் ஒரு பெரிய பணக்காரனுக்குவேன் - நீ தற்காலம் மிகவும் கடன் பட்டிருக்கிறாய், எனக்குத் தெரியும் - இந்த கடினம் - இவ்விடமே, உனக்கு