பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31


வி. (கண்களை மூடி ஏதோ ஜபித்துவிட்டு) ஆயத்தமாயிருக்கிறேன்-சித்தமா யிருக்கிறேன் - தயவு செய்து உன் வேலையை சீக்கிரம் முடி.

ஹெ. சற்று முன்பாக என்ன முணுமுணுத்தாய் ?

வி. என் தாய் தந்தையர்களிடமிருந்தும் என் மனைவி மகனிடமிருந்தும், மனதில் விடைபெற்றுககொண்டேன்.

ஹெ. ஒ! - தெரிகிறது! - அவர்களை இங்கு நேராக வர வழைத்து, நீ அவர்களிட மிருந்து விடைபெற்றுக் கொள்ளச் செய்வேனாயின் - எனக்கென்ன கொடுப்பாய்?

வி. நீ ஒரு மனிதன் என்கிற நன்கு மதிப்பை உனக்குக் கொடுப்பேன்.

ஹெ. உம் - பார்க்கலாம்! - (தன் எதிரிலிருக்கும் சிறு மணியை அடிக்கிறான்)

மாலுமி ஒருவன் வந்து நிற்கிறான்.

ஹெ. அந்த இந்தியர்களை யெல்லாம் - ஜாக்கிரதையாக அழைத்து வா-தக்க காவலுடன்.

வி. நீ - அவர்களை -- இங்கு - கொண்டுவந்திருக்கிறாயா?

ஹெ. ஆம்-உன்பொருட்டு.

வி. என்-பொருட்டாகவா ?

ஹெ. ஆம்-காரணத்தை நீயே காண்பாய்.

நான்கு கப்பல் படை வீரர்கள் அகஸ்தீஸ்வர முதலியார், அவரது மனைவி, பத்மா, கண்ணன், இவர்களைக் காவலுடன் அழைத்துக்கொண்டு வருகிறார்கள். விஸ்வநாதன் காயங்களைக் கண்டு அவர்கள் நால்வரும் திடுக்கிட்டு வருந்துகின்றனர்.

க. அப்பா! அப்பா !

ப. நாதா!

அ. பையா !