32
அ.அ. கண்ணே! கண்ணே!
ஹெ. நிறுத்துங்கள் இந்த அழுகை யெல்லாம் ! - இதோ பார் விஸ்வம் - உங்களுடைய அழுகை யெல்லாம் கேட்க எனக்குக் காலமில்லை - இதுதான் நான் உனக்குக் கூறப்போகிற கடைசி வார்த்தை. - உன் இரகசியத்தை உடனே எனக்கு நீ சொல்லவாவது வேண்டும்-
வி. மாட்டேன் !
ஹெ. பொறு அடா அப்பா பொறு ! நான் சொல்வதை முற்றிலும் கேள்-பிறகு நீயே வேறு பாட்டைப் பாடுவாய் - நீ எனக்குச் சொல்வாயானால் உங்கள் எல்லோரையும் நான் விடுவித்து விடுகிறேன். உங்கள் ஊருக்கு அழைத்துக்கொண்டு போய்விடுகிறேன். உன்னை மிகுந்த செல்வவானாக்குகிறேன் - பிறகு உங்கள் தேசத்தை நாங்கள் ஜெயித்தபின்-
வி. அது உங்களால் ஒருகாலும் முடியாது !
ஹெ. அடேய் ! நீ இனி குறுக்காக ஏதாவது ஒரு வார்த்தை பேசினாலும் - உன்னை உடனே சுட்டு விடுவேன்.
வி. அப்படியே செய், தயவு செய்து.
ஹெ. பிள்ளையாண்டான் ! அதை விட மேலான தொன்றை என்னிடம் வைத்திருக்கிறேன்-உன்னை தண்டிக்க ! உன் இரகசியத்தை உடனே வெளியிடாவிட்டால் நான் என்ன செய்வேன் என்பதைக்கேள் - உன் பையனை சமுத்திரத்தில் உன் கண் முன்பாகத் தூக்கிப் போட்டுவிடுவேன் -
வி. ஈசனே !
ஹெ. உன் மனைவி உன் எதிராகத் தன் கற்பினை இழப்பாள்-
வி. அப்பனே அப்பா !
ஹெ. நீ உன் தாய் தந்தையர்களை தெய்வமாகப் பூசிக்கிறயாமே-அந்த தாய் தந்தையர்களே-உன் கண் முன் துண்டம் துண்டமாக வெட்டி எறிவேன்! - தெரிகிறதா ?