பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

எஸ். நவராஜ் செல்லையா


ஒலிம்பிக் பந்தயத்தில், 400மீட்டர் அாரத்தை ஒடி முடித்து உண்டாக்கிய சாதனை நேரம் 45.60 விடிை. 1982ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்து முடிந்த வரையில் இந்த சாதனையை யாரும் மி ,சவில் ல. இந்தப் போட்டியில் வென்ற ஜப்பானிய வீரர் சுசுமு டகானேவின் நேரம் 48.66 வினுடிகள். இந்திய வீரரின் 22 வயது சாதனைக்கு இன்றும் வயது ஆகியும் இளமையாகிக் கொண்டிருக்கிறது. இந்தியருக்கு இது பெருமை தரக் கூடிய விஷயம் தானே ! தாயைப் போல பிள்ளை. தாயைப்போல பிள்ளே, நூலப்போல சேலை என்பது நம் நாட்டின் பழமொழி ! ஈன்ற பொழுகின் பெரிதுவக் கும் தன் மகனை, சான்ருேன் எனக் கேட்டதாய் என்பது குறள். தன்னுடைய மகள். அல்ல அல்ல. மகள்கள், பெற்ற பெருமையை ஒரு தாய் கேட்டு மகிழ்ந்தது மட்டுமல்ல. வீரத் தாய்' என்ற விருதினேயும் பெற்று மகிழ்ந்த கதை இத் தப் போட்டிகளில் நடைபெற்றது. லீகியாங் சன் எனும் 41 வயது தென்கொரியா மங்கைக்கு இரண்டு மகள்கள். இளையவள் பெயர் சூய் யூன்ஹி. வயது 15. இவள் 100 மீட்டர், 200 மீட்டர் பின்புறமாக நீந்தும் போட்டியில், மற்றும் 200 மீட்டர் மெட்லே தொடர்நீச்சலில் வென்று 8 தங்கப்பதக்கங்கள் பெற்ருள்.