பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

எஸ். நவராஜ் செல்லையா


17 வயதினளான இந்தப் பெண், கல்லூரி மாணவி மட்டுமல்ல, "தங்கப் பதக்கம்’ என்ற சினிமாவில் கதாநாயகியாக நடத்தவளும் கூட. என்ருலும் சினிமா அவளே பாதிக்கவில்லை 100 மீட்டர் ஒட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்று, தலை சிறந்த ஒட்டக்காரி என்ற அழியாப் புகழைப் பெற்று. விட்டாள். முதலில் படிப்பு, அடுத்தது விளையாட்டு, கடைசியில் தான் சினிமா என்கிற கட்டுப்பாடான கொள்கையை, நம் நாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பின் பற்றினுல் நம் நாடு இப்படியா இருக்கும் ? இங்கே சினிமா தானே எல்லாமுமாக இருக்கிறது ! ! ! 37 வயதில் இரண்டு குழந்தைகள் ஒலிம்பிக் பந்தயங்களில் மும்முறைத் தாண்டிக் குதிக்கும் போட்டியில் (TRIPLE JUMP) மூன்றுதடவை தங்கப்பதக்கங் களையும், நான்காவது முறையாக வெள்ளிப்பதக்கமும் வென்று, உலகை வியப்பில் ஆழ்த்திய பெருமை விக்டர் சானியேவ் என்ற ரஷ்யருக்கு உண்டு 1968ல் நடந்த மெக்சிகோ ஒலிம்பிக் பந்தயத்திலும்; 1972ல் நடந்த மியூனிக் பந்தயத்திலும், 1978ல் நடந்த மான்ட்ரியல் பந்தயத்திலும் தங்கப்பதக்கம் வென்ற விக்டர் சானியேவ், 1980ல் மாஸ்கோவில் நடைபெற்ற பந்தயத்தில் தங்கப்பதக்கம் பெறத் தவறிவிட்டார். வெள்ளிப்பதக்கம் வென்ற அந்த வீரருக்கு அப்பொழுது வயது 85. 7 வயது பையனுக்குத் தந்தையான வீரர் அவர்.