பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

எஸ். நவராஜ் செல்லையா


1 O எஸ். நவராஜ் செல்லையா நோக்கித் திரும்பிப் பார்க்கத்தான் வேண்டும். நேற்றைய நிகழ்ச்சிகள் தாம் இன்றைய வரலாறு என் பார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த, முரசு கொட்டி நடைபெற்ற மாபெறும் நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்திடும் போது, உங்கள் கேள்விக்கு, உகந்த விடை தகுந்த முறை யிலே கிடைத்து விடும். விளையாட்டுப் போட்டிகள் என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருவது பண்டைய கிரேக்கம்தான். கி. மு. 777ல் தொடங்கப்பட்டு சீரும் சிறப்புமாக நடத்தப்பெற்றன என்று குறிப்பிடப்படும் ஒலிம்பிக் பந்தயங் கள், கி. பி. 384ம் ஆண்டு வரை கோலாகலமாக நடத்தப் LiLi-5ক্ত - "சீர்கெட்டுப் போய் விட்டன. இந்த ஒலிம்பிக் பந்தயங் கள்' என்று சீற்றங் கொண்ட சாம்ராஜ்ய சக்ரவர்த்தி முதலாம் தியோடசிஸ் என்பவன், கி. பி. 894ம் ஆண் டோடு ஒலிம்பிக் பந்தயத்தை நிறுத்தி விட்டான். ஆண்மை மிகு அழகுப் போட்டிகளான ஒலிம்பிக் போட்டிகள் 1500 ஆண்டுகளுக்கு மேல் அழிந்தே போயின. ஆங்காங்கே தலைகாட்ட முடி யாமல் கூட அமிழ்ந்து கிடந்த ஒலிம்பிக் பந்தயங்களுக்குப் புத்துயிர் கொடுத்து புதுப்பித்துத் தந்தான் பிரெஞ்சுத் தலைமகன் ஒருவன். அவனே பியரி கூபர்டின் பிரபு என்பவன். அன்னரது அரிய முயற்சியால், 1896ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ந்ே தேதி, கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரத்தில் முதலாவது புதிய ஒலிம்பிக் பந்தயங் கள் மிகவும் பெருமையுடன் நடத்தப்பட்டன. உலக நாடுகள் அனைத்தும் பங்கு பெறலாம் என்று அழைப்பு அனுப்பிய போதும், உயிரோட்டமாக வந்து கலந்து கொண்ட நாடுகள் 9 தான்.