16
எஸ். நவராஜ் செல்லையா
# 6 எஸ், நவராஜ் செல்லே பா
/
அடுத்த நான்காவது ஆண்டான 1988ம் ஆண்டில்,
டெல் அலிவ் எனும் நகரில் இரண்டாவது மேல் திசை ஆசிய
நாடுகளின் போட்டிகள் நடைபெறுவதாக, இருந்ததானது, போர்க் காரணமாகக் கைவிடப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகளை நடத்த இயலாது என்பதால் தான் விடப்பட்டதே தவிர, தொடர்ந்து ஆசிய நாடுகளுக் கான விளையாட்டுக்கள் நடத்தப்பட வேண்டும் என்ற நினைவு. தம்மை, கிஞ்சித்தேனும் யாரும் இழந்தார்கள் இல்லை. அந்த ஒர் அரிய சூழ்நிலைக்காக அத்தகைய ஆர்வம் கொண்ட சோந்தி அவர்கள், ஏறத்தாழ 9 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அதற்காக அவர் காலம்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார். அதற்கேற்றவாறு ஒரு நல்ல சூழ்நில யும் உருவாகியிருந்தது.
1947ம் ஆண்டில் டெல்லி தலைநகரில் ஆசிய நாடுகள் உறவு பற்றிய மாநாடு நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கின் போது, திரு. ஜி. டி. சோந்தி அவர்கள், ஆசிய நாடுகளுக்கு என்று தனியாக விளையாட்டுப் போட்டிகள் இருக்க வேண்டும் என்ற அவசியத்தை வற்புறுத்தி, ஒரு சுற்றறிக்கையை வெளி யிட்டு வைத்தார்.
அவரது கருத்தை அனைவரும் ஆமோதித்தனர். ஏற்றுக் கொண்ட கருத்திற்கு ஏற்ப செயல்படவும் தொடங்கி விட்டனர். அப்பொழுது நமது திருநாட்டின் பாரதப் பிரத மராக விளங்கிய ஆசிய ஜோதி ஜவகர்லால் நேரு அவர்கன் , அரிய யோசனை ஒன்றை வெளியிட்டார்.
வெஸ்டர்ன் ஏஷியாடிக் கேம்ஸ் என்ற பெயரை மாற்றி விட்டு, Asian Games என்ற பெயரை நேருஜி கூறியவுடன் அக்னவரும் ஏற்றுக் கொண்டனர். அன்றிலிருந்து ஆசிய விளையாட்டுக்கள் என்றே நிலவி வருகிறது.