பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மூன்ருவது ஆசிய விளையாட்டுக்கள்-1958 --- ஜப்பானின் தலைநகரமாக விளங்கும் டோக்கியோ நகரில் மூன்ருவது ஆசிய விக் யாட்டுக்கள் 1958ம் ஆண்டு மிக விமரிசையாக நடைபெற்றன. 20 நாடுகள் பங்கு பெற்றன. 1400க்கும் மேற்பட்ட வீரர்களும் வீராங்கனைகளும் 18 நிகழ்ச்சிகளில் வெற்றி பெற போட்டியிட்டனர். இந்த விளையாட்டுப் போட்டிகளில் 5 புதிய நிகழ்ச்சிகள் புகுத்தப்பட்டிருந்தன. அவைகள்:- வளைகோல்பந்தாட்டம், சைக்கிள் போட்டி, டென்னிஸ், மேசைப் பந்தாட்டம், கைப் பந்தாட்டம் ஆகும். 1984ம் ஆண்டு டோக்கியோ நகரில் ஒலிம்பிக் பந்தயங் கள் நடைபெறுவதாக இருந்தன. அதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆசிய விளையாட்டுக்கள் நடைபெற இருந்ததால், ஏற்பாடுகள் எல்லாம் ஏராளமான பொருட் செலவில் மிக மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டிருந்தன. ஜப்பனின் பேரரசர் ஹிராஹிடோ அவர்கள் விளையாட்டு விழாவை முறைப்படி திறந்து வைத்து வாழ்த்தினர்கள்.