பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

எஸ். நவராஜ் செல்லையா


அவசர நேரத்தில், அரங்கத்தை விட்டு அத்தனை பேரும் 10 நிமிடங்களுக்குள்ளே வெளியேறிப் போய் விடும். அளவுக்கு வாசல் வசதிகள். தனித்தனியாக உள்ளே வந்து சேர தனித்தனி வாயில்கள், சுலபமாக வந்து செல்லும் வண்ணம் அமையப் பெற்ற அகலமான அமைப்புக்கள். நவீன சாதனமான கம்ப்யூட்டரின் மின் சாதனப் பொறி புள்ள வெற்றி எண் காட்டும் பெரும் பலகை, அதில் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் உடனுக்குடன் படங்களையும், வெளியாகும் முடிவுகளேயும் காட்டுகின்ற வண்ணம் அமைந்த அமைப்புக்கள். இம்முறையை ஹங்கேரிய, நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, இத்தகைய ஏற்றம் மிக்க எலெக்ட்ரானிக் போர்டுகள் அமையப் பெற்ற அரங்கமாக இது திகழ்கிறது. இத்துடன் மட்டுமல்லாமல், விகளயாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் தேவையான வசதிகளே அளிக்கும் வகையில் திறம்பட இட வசதிகளையும் இதிலே அமைந் திருக்கின்றனர். உடைகள் மாற்றிக் கொள்ளத் தனியறைகள் ; உடலை "மசாஜ் பண்ணிக் கொள்ள வசதிகள்; தங்கள் உடமைகளே ப் பத்திரப்படுத்தி வைக்கத்தக்க பாதுகாப்புப் பொட்டகங்கள் : லாக்கர்கள்; மருத்துவ அறை, உணவுக்கூடம், சிற்றுண்டிக் சாலை, செய்திகளை சேகரிக்கும் பத்திரிக்கையாளர்கள் அறை என்று பல்வேறு விதமான வசதிகளையும் வைத்துக் கொண்டி குக்கிறது இந்த அரங்கம். போட்டே எடுத்தபிறகு, உடனுக்குடன் அவற்றைப் படமனக்கும் வசதிகளும், இதில் உண்டு. எனவேதான், இந்த புகழ்மிக்க ஸ்டேடியத்தில் ஒன்டி தாவது ஆசிய விளையாட்டுக்களின் அணிவகுப்பு ஆரம்பநாள்