பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 புதிய சாதனைகளில் புரட்சி விரைக, உயர்க, வலிமை பெறுக என்பது தான் ஒலிம்பிக் பந்தயத்தின் குறிக்கோள். . . . . இந்த குறிக்கோள் ஒவ்வொரு போட்டியின் போதும் நிதர்சனமான உண்மையாக நடந்தேறி, மக்களே மகிழ்விக் கிறது. முன்னேற்றப் பாதையில் முனந்து நடைபெறச் செய் கிறது. மனித சக்திக்கு எல்லேயில்லை என்ற மாபெரும் கருத்தினத் தெளிவு படுத்தி, வலிமைப் படுத்துகிறது. 1978ம் ஆண்டு நடைபெற்ற 8வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 12 நிகழ்ச்சிகளில் புதிய சாதனைகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் ஆண்களுக்கானப் போட்டி களில் 7 நிகழ்ச்சிகளிலும், பெண்களுக்கானப் போட்டிகளில் 5 நிகழ்ச்சிகளிலும் புதிய சாதனைகள் நிகழ்ந்தன. 1982ம் ஆண்டு நடைபெற்ற ஆசியப் போட்டிகளில் 27 திகழ்ச்சிகளில், புதிய சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன. வீரர்கள் போட்டியிலே 18 நிகழ்ச்சிகளிலும், வீராங்கனைகள் வரிசையிலே 1 நிகழ்ச்சிகளிலும் புதிய சாதனைகள் பெருக் கெடுத்து ஓடியிருக்கின்றன.