பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

எஸ். நவராஜ் செல்லையா


雷@ இதில் பாகிஸ்தான் 20 முறை வென்றுள்ளது. இந்தியா 8 முறைகள் தான் வெற்றி பெற்றுள்ளது. 4 முறைகள் தான் வெற்றி தோல்வியில்லாமல் சமநிலை அடைந்திருக்கின்றன. இனி வருங்காலம் எப்படி அமையுமோ ? நமது விண் யாட்டுத் தலைமை என்ன செய்யுமோ ? பொறுத்திருந்து பார்க்கலாமே ! அதற்குள்ளே ஒரு எதிர்பாராத வாய்ப்பு இந்தியாவிற்கே கிடைத்து விட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில், செண்டா கோப்பைக்கான போட்டி நடைபெற்றது. இந்தியாவை 7-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த பாகிஸ்தான், இந்தப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவிடம் தோற்றுப்போனது. அதுமட்டுமல்ல; மீண்டும் பாகிஸ்தான் ஹாலந்து அணி யிடம் 8-6 என்ற கோல் கணக்கில் தோற்றதோடல்லாமல், அரை இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை யும் இழந்து வெளியேறியது. இந்தியா ஆஸ்திரேலிய அணியிடம் 18.12.82ந் தேதி விளையாடி 6 கோல் வாங்கித் தோற்று, வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றது. பாகிஸ்தான் தோற்று 6வது நாடாகப் போனது.