பக்கம்:இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியாவில் ஆசிய விளையாட்டுகள்

93


பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், ஒயி லாட்டம் நடைபெற, பண்டிட் ரவிசங்கர் இயற்றித்தந்த இசை மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தது. பின்பு, 12 குழல் ஊதுபவர்கள் ஒன்ருக இருந்து, உரத்த இசையில் குழலூத எழுபத்திரெண்டாயிரம் ரசிகர்கள் எழுந்து மெளனமாக நிற்க, கொடிக்கம்பங்களிலிருந்து மூன்று கொடிகளும் இறக்கப்பட்டன. சரியாக 4 மணி 18 நிமிட அளவில், புனித ஆசிய ஜோதி அணைக்கப்பட்டது. ஆசிய விளையாட்டு விழாவின் கொடியும் , 1951 ல் நடைபெற்ற முதல் ஆசிய விளையாட்டுக்களில் பயன்படுத்தப் பட்ட ஆடம்பரவிளக்கும், டில்லியில் உள்ள லெப்டினென்ட் கவர்னர் திரு. ஜக்மோகனிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர், 1983ம் ஆண்டு, தென் கொரியாவில் உள்ள சியால் நகரில் நடைபெற இருக்கும் 10வது ஆசிய விளையாட்டு நடைபெறும் வரை, இந்தக் கொடியைப் பாதுகாத்து வைத்திருப்பார் . 9 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இனிதாக நிறைவு பெற்றன என்பதைக் குறிக்கும் வகையில் 5 முறை பீரங்கிகள் முழங்கின மனிதாபிமானத்துடனும், சகோதர பாசத்துடனும், 1986ம் ஆண்டு தென் கொரிய நாட்டின் சியோல் நகருக்கு ஒன்றுசேர வாருங்கள் என்று ஆசியக் கண்டத்தின் அத்தனை நாட்டு இளைஞர்களுக்கும் மக்களுக்கும் விடுத்த பலிந்தர் சிங்கின் அழைப்பு. வெற்றியாகப் பலித்திட, இந்திய இளைஞர் கள் இன்றிலிருந்தே உழைத்திட வேண்டும். அதுவே, நாம் வெற்றிகரமாக நடத்திய ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குக் கொடுக்கின்ற பிரதிபலகை அமையும்.