பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

11 பணியாற்றுவதன் மூலம் தமிழ்ச் சமுதாயத்தைப் பாது காக்கும் அரணாக விளங்க திராவிட முன்னேற்றக் கழக மும் முறையே பெரியார் தலைமையிலும், அறிஞர் அண்ணா தலைமையிலும் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றன. இந்தப் பிரிவினை திராவிடர் இயக்கத்தில் தோன்ற வேறு சில கருத்து வேறுபாடுகளும் உண்டு. தி.க. - தி.மு.க. இரட்டைக்குழல் துப்பாக்கி "திராவிடர் கழகம் இரண்டாகப் பிரிந்தாலும், இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல் இயங்கும்" என்று தி. மு. க. தலைவர் அறிஞர் பெருந்தகை அண்ணா எடுத்துச் சொல்லி தாய்க் கழகமான திராவிடர் கழகத்தை அழிக்கும் முயற்சியில் ஒரு சிறிதும் ஈடுபடாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். தி. மு. கழகம் எழுப்பிய நாட்டுப் பிரிவினை முழக்கம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது! கொள்கையை நசுக்க் சட்டபூர்வமாக, பிரிவினைக் டெல்லி அரசு முற்பட்டது! போர்- என்றெல்லாம் இந்தியாவின் இதற்கிடையே சீன ஆக்கிரமிப்பு, பாகிஸ்தானுடன் பாதுகாப்புக்கு அறைகூவல் விடப்பட்டதைக் கழகம் சிந்தித்துப் பார்த்தது. நாட்டுப் பாதுகாப்பை யொட்டியும், பிரிவினை கேட்டதற்கான காரணங்களை மத்திய அரசு புரிந்து கொண்டு செயலாற்றும் என்ற நம்பிக்கையுடனும், அந்த