பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13 என்ற நிலையில் எட்டுபேர், தங்கள் உடலுக்குத் தீயிட்டுக் கொண்ட நிகழ்ச்சி தமிழ்நாட்டிலேதான் நடைப்பெற்றது. "தமிழைக் காக்க, இந்தியை எதிர்க்க நான் தீக்குளிக் கிறேன்” என எழுதி வைத்துவிட்டு எட்டுத் தமிழர்கள் மாண்டனர். மொழிப்புரட்சி அந்த மொழிப் புரட்சியின்போது அதனை அடக்க பல பிணங்களைக் குவித்தனர்; பல்லாயிரவரைச் சிறையில் வதைத்தனர். ஏறத்தாழ, இருபத்தைந்து கொட்டடிகள் இருந்த பாளையங்கோட்டைச் சிறைச் சுற்றடைப்புக்குள் எல்லாக் கொட்டடிகளையும் காலியாக வைத்துவிட்டு ஒரே ஒரு கொட்டடியில் மட்டும் என்னைத் தனிமைச் சிறைப் படுத்தியிருந்தார்களே, அதனை மறக்க முடியுமா நான்? 1938-இல் எந்த இராஜாஜி தமிழ்நாட்டுக்குக் கட்டாய இந்தி தேவை என்று அறிவித்தாரோ, அதே இராஜாஜி அண்ணா அவர்களுடன் இணைந்து 1964-65-ஆம் ஆண்டு களில் இந்தியை வன்மையாக எதிர்த்தார். இந்தப் பெரும் புரட்சிக்கு முன்பே திராவிடர் கழக மும், திராவிட முன்னேற்றக் கழகமும்-புகை வண்டி நிலையங்களிலும் அஞ்சலகங்களிலும் இந்திக்கு முதலிடம் தந்திருந்ததை எதிர்த்து, இந்தி எழுத்து அழிப்புப் போர் ஒன்றை நடத்தித் தமிழர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை டெல்லிக்கு அறிவித்திருந்தன. சாஸ்திரி ஆட்சியின்போது ஏற்பட்ட "சிரிமாவோ- சாஸ்திரி உடன்பாடு," தமிழ்நாட்டு மக்களைப் பற்றியது என்ற எண்ணமே இல்லாமல் கையெழுத்தாகியது. இலங்கை தமிழர்களின் பிரச்சனையைத் தீர்க்கவே அந்த