பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சின்னஞ்சிறு கிராமங்களையும் முக்கிய சாலைகளுடன் இணைக்கும் இணைப்புச் சாலைத் தீவிரத் திட்டம். சுற்றுலா வாரியத்தில் மறுமலர்ச்சி; மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு, எத்தனை சாதனைகள் புரிய முடியுமோ, அத்தனையும் செய்து, மேலும் மாநில மக்களுக்கு நன்மைகள் புரிய மாநில சுயாட்சியின் மூலம் பெறும் அதிகாரங்கள் அதிகாரங்கள் தேவையென்று தி.மு.கவும், தி.மு.க. அரசும் வலியுறுத்திக் கொண்டேயிருந்து, அதற்கோர் பெருந்திருப்பமாகத் தமிழகச் சட்டப் பேரவை யிலேயே மாநில சுயாட்சித் தீர்மானம் கொண்டுவரப் பட்டது. சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானம் மாநில சுயாட்சித் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி (பழையது புதியது இரண்டும்) இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஆகியவை எதிர்த்தன. திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களைத் தலைவராகக் கொண்ட அ. தி. மு. க. கட்சி, அந்தத் தீர்மானத்தை மிகக் கடுமையாக எதிர்த்தது. அண்ணாவின் பெயரால் கட்சி! ஆனால் மாநில சுயாட்சித் தீர்மானத்திற்கு எதிர்ப்பு! அதே எம்.ஜி.ஆர்.தான் 1972ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தி. மு. க மாநாட்டில் "மாநில சுயாட்சிக்காக மத்திய அரசின் இராணுவத்தைச் சந்திக்கத் தயார்" என்று பேசினார். டெல்லியின் சூழ்ச்சி வலை தி. மு. கவின் கொள்கை ரீதியான வளர்ச்சியைக் குறைத்தால்தான் இந்திய அரங்கில் தமிழ் நாட்டின் குரலை ஒடுக்க முடியுமெனக் கருதிய டெல்லி அரசினர்,