பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்த அளவு நிதியை இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் யுத்தத்திற்காக வழங்கிடவில்லை. மத்திய மாநில உறவுகளில் ஏற்பட்ட கீறல், இந்திய நாட்டுப் பாதுகாப்பை ஊனப்படுத்தவில்லையென்பதற்கு இது எடுத்துக் காட்டு. பங்களாதேஷ் வெற்றியும், புதிய வங்க் தேசத் தோற்றமும் ஏற்பட்ட பிறகு இந்தியாவின் புகழும், இந்திராவின் பெருமையும்-உயர்ந்தன எனினும்' இந்திராவை தி. மு. கழகத்தைப் பொறுத்தவரையில் . குறுகிய க்ண்ணோட்ட முடையவராக ஆக்குவதில் அவரைச் சுற்றியிருந்தோர் வெற்றி பெற்றனர். இந்த நேரத்தில்தான் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் 'முழுப் புரட்சி' முழக்கம் கேட்க ஆரம்பித் தது. அவரது நோக்கம் ஊழலை ஒழிப்பது! பீகாரில் தொடங்கிய அவரது கிளர்ச்சியின் நோக்கத்தைத் தி.மு.க. ஆதரித்தது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசை மத்திய அரசு திடீரெனக் கலைத்துவிட வேண்டுமென்று எந்த ஒரு கட்சி சொல்வதையும் தி மு.க. ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் மத்தியில் கூட்டாட்சி- மாநிலத்தில் சுயாட்சி என்ற தத்துவத்திற்கு அது முரணான தென்று கழகம் கருதுகிறது. ஜெயபிரகாஷ் அவர்கள் நாடு தழுவிய லஞ்ச ஊழல் ஒழிப்புப் போரை நடத்த வேண்டுமென்று கூறியபோது, தமிழ்நாட்டு அரசின் சார்பில் அவரோடு விவாதித்து அவரது அறிவுரைகளை ஆராய்ந்து மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. "தமிழக முதல்வர் கருணாநிதி, என் கோஷத்தை அலட்சியப்படுத்தாமல் பேச்சு வார்த்தைகள், விவாதங்கள் அனைத்திற்கும் தயாராக இருக்கிறேன் என்று கூறியிருப்