________________
“தமிழ்நாட்டில் மதுவிலக்கு மீண்டும் அமலில் வந்த மைக்கு மகிழ்ச்சி! குதிரைப் பந்தயத்தையும் ஒழிக்கச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளீர்கள். மகிழ்ச்சி! பரிசுச் சீட்டையும் நிறுத்திவிட்டால் மிகவும் மகிழ்வேன்.” -என்று அந்த விழாவில் ஜே. பி. பேசினார். அதே மேடையில், அடுத்த செப்டம்பர் முதல், பரிசுச் சீட்டு நிறுத்தப்படும் என்று கழக அரசின் சார்பில் அறிவித்தேன். அவ்வாறே கழக ஆட்சியில் பரிசுச் சீட்டும் நிறுத்தப்பட்டது. ஜே.பி.க்கும்-தி. மு. க.வுக்கும் இடையில் வளர்ந்த நட்பு, இந்திரா குழுவினரைப் பொங்கி எழச் செய்தது. அந்தக் கோபத்தைக் காட்டி, தி. மு. க. அரசை கவிழ்த்து விடுகிற அளவுக்குக் காரணங்கள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மத்திய அரசின் ஆளுங்கட்சிக்கும், மாநில அரசின் ஆளுங்கட்சிக்கும் சில கொள்கை ரீதியான முரண்பாடுகள். நடைமுறையில் எழுந்த பிரச்சினைகள் மட்டுமன்றி, எல்லாவற்றுக்கும் மேலாக இந்திராவுக்கும் தி. மு. க. வுக்கும் வேறுபாடு முற்றிட 1975-ஆம் ஆண்டு காரணமாக அமைந்தது என்றால் அது மிகையன்று. கள் "இந்திராகாந்தியின் தேர்தல் செல்லாது; அதில்ஊழல் நடைபெற்றுள்ளன” என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சின்ஹா தீர்ப்பு வழங்கினார். மேல் முறையீட்டுக்கு இந்திராகாந்தி உச்ச நீதிமன்றத் திற்குச் சென்றார். உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்தறிவதற் குள்ளாக, அவசரம் அவசரமாக தேர்தல் விதிகளை மாற்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, உச்ச நீதிமன்றம்