பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 சதி நடத்துவோர்-வன்முறையில் ஈடுபடுவோர்- தகாத முறையில் பேசுவோர்-எழுதுவோர் தண்டிக்கப் பட, ஏற்கனவே எத்தனையோ சட்டங்கள் இருக்கும்போது, நாட்டைச் சர்வாதிகாரப் பாதைக்கு இழுத்துச் செல்லும் வகையில் இந்த அவசரச் சட்டம் அமுலுக்கு வருவது தேவைதானா? 'சனநாயகத்தைப் பாதுகாக்கிறோம்' எனக் கூறி, சர்வாதிகாரக் கொற்றக்குடையின் கீழ் தர்பார் நடத்திட எடுக்கப்படும் முயற்சி நாட்டுக்கு ஏற்றதுதானா? தியாகத் தலைவர்களை விடுதலை செய்க இவைகளையெல்லாம் இந்திரா காந்தி அம்மையார் சிந்தித்துப் பார்த்து-நேற்றைய அவசரகாலப் பிரகடனத் தினைத் திரும்பப் பெற்றுக் கொண்டு-நாட்டின் புகழ்மிக்க தியாகத் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்திட முன்வர வேண்டும். பத்திரிகையாளர்களின் கைக் கட்டுகளை அவிழ்த்து விட்டு பத்திரிகைகளுக்குரிய நியாயமான உரிமைகளைத் தடையின்றி வழங்கவேண்டும். அதுவே, 'இந்திய சனநாய கத்துக்குப் பெருமை சேர்க்கும் காரியமாகும்' என்று தி.மு.க. செயற்குழு சுட்டிக்காட்டுவதோடு, சனநாய கத்தைப் பாதுகாக்க இந்தச் செயற் குழு, தலைமை யமைச்சர் இந்திரா காந்தி அவர்களுக்கு விடுக்கும் இந்த வேண்டுகோள், வெற்றி பெற இந்திய நாட்டு மக்கள்- சிறப்பாகத் தமிழ் நாட்டு மக்கள் காந்தியடிகள் நெறியை மறவாமலும், சனநாயகச் சின்னமாம் அறிஞர் அண்ணா வின் பாதையிலிருந்து தவறாமலும், தமக்கே உரிய தனிப் பண்பாட்டுடன்--அமைதியான முறையில்-வன்முறை தவிர்த்த வழியில்-சட்டம், ஒழுங்குக்கு ஊறு நேரா