பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

37 வண்ணம், நாட்டுக்கு வந்துள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது. சனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள இந்தப் பேராபத்தை நீக்குவதற்குத் தமிழ்நாட்டில் உள்ள தி. மு. கழகம் தோழமைக் கட்சிகளுடனும், இந்தப் பிரச்சினையில் ஒத்த கருத்துடைய மற்ற கட்சிகளுடனும் தொடர்பு கொண்டு, ஆவன செய்திடும் முயற்சிகளை மேற்கொள்ளும் அதி காரத்தைக் கழகத் தலைவருக்கும்-பொதுச் செயலாளருக் கும் இந்தச் செயற்குழு வழங்குகிறது." இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு; பிறகு இரண்டு வாரங்கள் கழித்துச் சென்னைக் கடற்கரையில் தி.மு.க. நடத்திய ஐந்து லட்சம் மக்கள் கொண்ட கூட்டத்தில், நெருக்கடி நிலையைத் திரும்பப்பெற்று அரசியல் தலைவர்களை விடுதலை செய்து-பத்திரிகைச் சுதந்திரத்தையும் வழங்குமாறு ஐந்து லட்சம் பேரும் எழுந்து நின்று சூளுரை எடுத்துக் கொண்ட செய்தி, உலகத்து அரசியல் அரங்கம் மிக உன்னிப்பாகக் கவனித்த தொன்றாகும். தன்னைச் சர்வாதிகாரியாக ஆக்கிக் கொள்ள இந்திரா முடிவெடுத்து விட்டார் என்று முதன் முதலாக கேலிச் சித்திரத்தின் மூலம் கண்டனம் செய்த ஏடு, தமிழ்நாட்டில் கழக ஒலியென விளங்கும் ‘முரசொலி' தான். அந்தக் கேலிச் சித்திரத்தை வெளிநாட்டு முக்கிய ஏடுகள் எல்லாம் கூட எடுத்துப் பிரசுரித்தன. இந்திராவின் எதேச்சாதிகாரப் போக்குக் கண்டு, காமராசர் கலங்கினார்... மன வேதனையால் நோயுற்றுப் படுக்கையில் விழுந்தார். அவரைக் கண்டு நலம் விசாரிக்க நானும், அன்றைய கல்வியமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும்