பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 ஏற்கனவே கழக் அரசு தமிழகத்தில் தொடர்ந்து நடத்தி வந்த பதினைந்துக்கும் மே ற்பட்ட திட்டங்களையே இந்திராகாந்தி இருபது அம்சத் திட்டம்' என்று அறிவித் தார். மிசாவில் சமூக விரோதிகள் கைது செய்யப்பட வேண்டும் என்ற அறிவிப்புக்கு இணங்க, கள்ளச்சாராய வியாபாரிகள் நூற்று ஐம்பது பேரைக் கழக அரசு மிசாவில் கைது செய்தது. அந்த நூற்று ஐம்பது பேரில் தி. மு.க ஆதரவாளர்கள் கூட நாலைந்து பேர் இருந்தனர். அந்த நூற்று ஐம்பதில் இரண்டு பேர் அ.தி.மு.க.வையும், காங்கிரசையும் ஆதரிப்பவர்கள் என்பதற்காக, அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டியாரிடம் முறையிட்டார்கள். ஆளுக்கொரு விதமாகச் செயல்பட்ட அவசரகாலச் சட்டம்! இருவரை மட்டும் விடுவித்தால் நன்றாக இருக்காது என்று, கள்ளச் சாராய வியாபாரக் கோமான்கள் யாரையுமே மிசாவில் கைது செய்யக்கூடாது என்ற ஒரு பொது உத்தரவை, மத்திய அரசு தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. அதன்படி அந்த, நூற்றி ஐம்பது பேரும் விடுவிக்கப்பட்டனர். அவசர காலச்சட்டம். ஆளுக்கொரு விதமாகச் செயல்படுத்தப்பட்டது என்ப தற்கு இது ஓர் உதாரணம். அவசர காலச் சட்டத்தின்படி தொழிலாளர்க்குப் போனஸ் கிடையாதல்லவா? அதற்காக அவர்கள் கிளர்ச்சி செய்யவும் முடியாதல்லவா? கோவை போன்ற இடங்களில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களுக்கு போனசுக்குப் பதிலாக "முன்பணம்"