பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 "இன்று காலையில் சென்னைக்கு வந்த நான், தி.மு.க. சார்பில் இப்படியொரு மாநாடு நடப்பதாகக் கேள்வியுற்று நானே வலுவில் வந்து மாநாட்டில் கலந்து கொண்டிருக் கிறேன். ஏன் தெரியுமா? இப்போது இந்தியாவில் தமிழ் நாட்டைத் தவிர வேறு எங்கும் மக்களைச் சந்தித்துப் பேச முடியாது." -இவ்வாறு 1975 ஜூன்முதல், 1976 ஜனவரி 31-ஆம் நாள் வரையில் ஏழெட்டு மாத க்ாலம் நெருக்கடி காலத் தொடக்க கட்டத்தின் கடுமையும், கொடுமையும் வெறும் நிழலாகக்கூட தமிழ் மக்களைத் தீண்டாமல் பாதுகாத்தது தி.மு.க. அரசுதான்! இந்திராவின் எதேச்சதிகாரத்தைக் கண்டித்து செயற் குழு, பொதுக் குழு மட்டுமல்ல, கழக மாநாடுகள் அனைத் திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழகத் தீர்மானங்கள், கழகம் வெளியிட்ட துண்டு அறிக்கைகள், பல்வேறு மொழிகளில் அவரவர்களாகவே அச்சிட்டும், தட்டச்சு மூலம் அடித்தும், "ரோனியோ’ மூலம் பிரதிக்ள் எடுத்தும், உலக நாடுகள் அனைத்துக்கும் அனுப்பி வைத்தனர் ஆயிரக்கணக்கில் நெருக்கடி நிலையை தி.மு.க. எதிர்ப்பதைக் கண்டித் தும், இருபது அம்சத் திட்டத்தை கழக அரசு நிறைவேற்ற வில்லை என்று குறிப்பிட்டும் -அ. தி. மு. க., காங்கிரஸ் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியினர் கண்டனத் தீர்மானத் தின் மீது மிகக் காரசாரமாகப் பேசியதற்கு முதலமைச்சர் என்ற முறையில் சட்டப் பேரவையில் நான் அளித்த பதிலுரையில், எழுப்பப் பட்ட பிரச்சினைகள் அனைத்துக் கும் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த உரை, “வாளும் கேடயமும்” என்ற நூல் வடிவில் வெளியிடப்பட்டது. அதன் ஆங்கில மொழி பெயர்ப்பை சர்வோதயத்தினரும்