________________
டார். இப்படிப்பட்ட சர்வாதிகாரக் கொடுமையை ஆதரிக்கிற அ.தி.மு.க. தலைவரையும் அவர் கடுமையாகச் சாடினார். 1976-ஆம் ஆண்டு இந்தியாவில் பொதுத் தேர் தலை நடத்தவேண்டுமென்றும், நாடாளுமன்றத் தேர்தலை யும், சட்டமன்றத் தேர்தலையும் இணைத்தே நடத்த வேண்டுமென்றும், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி யைக் கொண்டுவரும் உத்தேசத்தைத் தமிழகம் ஒப்புக் கொள்ளாது என்றும், அது சனநாயகத்தைத் தூக்கிலே போடுவதற்கு ஒப்பாகுமென்றும் குறிப்பிட்டு என்னுடைய தலைமை உரையை ஆற்றினேன். தோழமை கட்சிகளின் விசித்திரநிலை தமிழரசுக் கழகத் தலைவர் சிலம்புச் செல்வர் ம. பொ. சி., முஸ்லிம் லீக் தலைவர் சமத் ஆகியோர் அன்றைய மாநாட்டில் பேசிய பேச்சுக்களை இன்றைக்கும் ஒலிப்பதிவுப் பெட்டியில் வைத்துக் கேட்டால் உடலெல்லாம் புல்லரிக் கும். ஈருடல் ஓருயிர் என்று இணைந்த தோழமைக் கட்சி கள் என்று கூறிக்கொண்ட அவர்கள், இன்றைக்கு இந்திராவின் சர்வாதிகாரத்தை ஆதரிப்பது மட்டுமல்ல, தி. மு. கழகத்தின் எதிர்ப்பாளர் வரிசையிலும் முன்னோடி களாக நிற்கிறார்கள். அந்த மாநாட்டில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் இன்னமும் தி. மு. கழகத்தின் தமிழ்ப் பணியையும் தமிழர்ப் பணியையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். கழகத்திற்கு ஏற்படும் துன்ப துயரங்களில் தங்களால் இயன்ற அளவு பங்கு பெறுகிறார்கள்.