________________
50 கோவை மாநில மாநாடு, டெல்லியில் இந்திரா வட் டாரத்துக்கு எரிச்சலைப் பல்லாயிரம் மடங்கு அதிகமாக் கியது. அந்த மாநாட்டில், இந்திரா அரசு தமிழக அரசுக்கு எழுத்து மூலமாக அல்லாமல் பொறுப்பான ஒருவர்மூலம் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை தி.மு.க. அரசு கைது செய்யுமா? என்று கேட்ட விபரம் மறைமுகமாக வெளியிடப்பட்டதாலும், ஏற்கனவே ஜூலை யில் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் நான் தெரிவித்த கருத்தையொட்டியதாக அந்தத் தகவல் இருந்ததாலும், எரிமலையாக மாறினார் தி.மு.க. வைப் இந்திரா பொறுத்து! கழக அரசின் தமிழ்ப்பணிகளில் ஒன்றான - ஒப்பற்ற வள்ளுவர் கோட்டத்தின் பணிகள் முடிவடையும் தறுவா யிலிருந்தன. சனவரித் திங்களில் பெரும் பகுதி, என் வேலை வள்ளுவர்கோட்டத்தைக் கட்டி முடிப்பதிலும், காமராசர் நினைவகத்தைக் கட்டி முடிப்பதிலும் திருப்பிவிடப்பட்டது என்றே கூறலாம். பிப்ரவரித் திங்கள் முதல் வாரத்தில் காமராசர் நினைவகம் பொதுமக்கள் பார்வைக்குத் தயாராகிவிடும் என்று அறிவிக்கப்பட்டது. வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாவை மிகச் சீரிய முறையில் நடாத்துவதற்காக பிப்ரவரி 15 என்று நாள் குறிக்கப்பெற்றது. இதற்கிடையே ஜனவரி 29, 30, 31 நாட்களில் கிண்டி காந்தி மண்டபத்தில் கவர்னர் முன்னின்று நடத்தும் காந்தி ஜெயந்தி நடைபெற்றது.