________________
60 1-ஆம் தேதி காலையில் தி. மு. க. அரசின் நிர்வாக ஊழல், சட்டம் ஒழுங்கு, இல்லை என்பது போன்ற குற்றச்சாட்டு களை அடுக்கினார். அவருக்கே தெரியாது, ஆட்சி கலைக்கிற விவகாரம்! டில்லியில் உள்துறை அமைச்சரகத்திலேயே கழக அரசைப் பற்றிய புகார் அறிக்கையைத் தயார் செய்து கவர்னரிடம் ஆட்சியைக் கலைத்த பிறகு கையெழுத்துப் பெற்றார்கள் என்ற உண்மையும் பிறகு வெளிவந்தது. மீது 1972-ஆம் ஆண்டு தி. மு. க. அரசின் திரு. எம். ஜி. இராமச்சந்திரன், முதலியவர்களால் கொடுக்கப்பட்டு, பூர்வாங்க ஆதாரம் எதுவுமில்லாத தால் கிடப்பில் போடப்பட்டிருந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு புகார்மனுனை தேடிப்பிடித்து. 4 தி.மு.க. :முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் தி.மு.க. அந்தக் கமிஷனை வரவேற்றது என்றாலும்கூடப்போகப் போக அந்தக் கமிஷன் நடைபெற்ற முறைகள் தி. மு. க. சார்பில் வாதாடிய சாந்திபூஷண் போன்ற வழக்கறிஞர் களுக்கே நம்பிக்கையூட்டுவதாக இல்லை; மிசாவைக் காட்டி சாட்சிகளைத் தயாரித்தார்கள் புகார்மனு கொடுத்தவர் களையும் வாக்குமூலம் கொடுத்துள்ள எல்லா சாட்சி களையும் விசாரிக்க வேண்டும் என்றும், தி. மு. க. தரப்பில் உள்ள வழக்கறிஞர்கள், அந்த சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டுமென்றும் சர்க்காரியா அவர் களிடம் விடுத்த முறையீடு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஒருசில சாட்சிகளை மட்டுமே விசாரிக்க முடியும் என்று சர்க்காரியா கூறிவிட்டார். அதை எதிர்த்தும், C B 1. அதி காரிகளையும், காவல் துறை அதிகாரிகளையும் விட்டு சாட்சி களை உருவாக்குவதைக் கண்டித்தும், அந்த விசாரணையில் கலந்து கொள்வதில்லையென்று தி. மு. க. முடிவெடுத்தது.