பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 பாடப்புத்தகங்களில் நாட்டுத் தலைவர்களைப் பற்றிய கட்டுரைகளில் பெரியார் பற்றி இருந்த கட்டுரைகள் அகற்றப்பட்டன. பாட புத்தகங்களை ஆராய்கிற குழு என ஒன்றை அமைத்து அந்தக் குழுவைப் பயன்படுத்தி தமிழுக்காகப் பாடுபட்ட சான்றோர்களைப்பற்றிய குறிப்புக்களைக்கூட அந்தப் புத்தகங்களில் இருந்து அகற்றினார்கள். தமிழ் உணர்வைக் கெல்லி எறியும் முயற்சி! தமிழ் உணர்வைக் கெல்லி எறிய எடுத்த முயற்சி களைத் தொடர்ந்து, திராவிடர் இயக்கத்தின் தலையாய சாதனையாகக் கருதப்படும் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தை வெளிப்படையாக எதிர்க்காமல் மறைமுகமாக அழித்தொழிக்கத் தகுதி, திறமை என்ற மாய வலைகள் பின்னப்பட்டன. தமிழக் ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் கல்வித் துறையிலும் வேலை வாய்ப்புத் துறையிலும், நீதித் துறையிலும், உயர் பதவிகளிலும் பெரும்பாலான இடங்களைப் பெறமுடிந்தது. ஆளுநரின் ஆலோசகர் ஒருவர், அந்த நிலையை மாற்றிக் கம்யூனல் ஜி.ஓ. வைக காலில் போட்டு மிதிப்பேன் என்று சத்தியம் செய்து கொண்டு செயலில் இறங்கினார். இதுபோன்ற திட்டமிட்ட சதிகளை எடுத்துச் சொல் லவோ, எழுதவோ, மேடைகளில் பேசவோ உரிமை உண்டா? இல்லை! கழக அரசு இருந்தபோது மத்திய அரசு நடை முறைப்படுத்திய தணிக்கை முறை; ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு மேலும் கடுமையாக்கப்பட்டது. தணிக்கை கெடுபிடிகள்! கழக ஏடான முரசொலியிலோ, கழகக் குரல்' எனும் தலைமைக்கழக வார இதழிலோ கழக சார்புடைய வேறு