பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 மரியாதை செலுத்த சாத்தூர் சென்றேன். முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் தான் கார் ஓட்டி வந்தார். எனக்குக் காரோட்டி வந்த குற்றத்திற்காகக் கண்ணப் பனும் மிசா கைதியாக ஆனார். திருமண நிகழ்ச்சிகளில் தலைமை ஏற்க அழைக்கப் பட்டேன். பெரியார் அறிமுகப்படுத்தி, அண்ணா முதல் வராக இருந்தபோது சட்ட சம்மதம் பெற்ற சுய மரியாதைத் திருமண விழாக்களில் மணமக்களை வாழ்த்தி அறிவுரை கூறும் வாய்ப்பு உண்டல்லவா? அதனைப் பயன் படுத்திக் கொண்டு திருமண விழாக் களில் நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பான கருத்துக்களையும். நாட்டில் நடக்கும் அநீதிகளையும் விளக்கினேன். இந்திரா எடுத்துக்கொண்ட சபதம்! கிரி திருச்சி, பொன்மலை, லால்குடி, சென்னை ஆகிய இடங்களில் நான் திருமண விழாக்களில் பேசிய பேச்சுக் களுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட முயற்சிகள் நடந் தன. பிறகு அவைகள் கிடப்பில் போடப்பட்டன. மினல் குற்றம், ஊழல் வழக்கு போன்றவைகளுக்காக என் மீது விசாரணை நடத்திச் சிறையில் போட்டு அவமானப் படுத்த வேண்டு மென்பதுதானே இந்திராகாந்தியின் திட்டம்! அதனால் அவர்கள் என் மீது அரசியல் வழக்கு கள் போட விரும்பவில்லை. "கருணாநிதியைத் தியாகி ஆக்கமாட்டேன்; ஊழல் பேர்வழி என்று களங்கப் படுத்திடுவேன்”. சென்னை கவர்னர் மாளிகையில் இந்திரா எடுத்துக் கொண்ட சபதம் இது!