பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

[அந்தச் சபதம் நிறை வேறியதோ இல்லையோ, எய்த கணை, எய்தவரையே இன்று திருப்பித் தாக்குகிறது.) திருமண விழாக்களுக்கு என்னை அழைத்தவர்கள் மிசாவிலோ, அல்லது பாதுகாப்புச் சட்டத்திலோ கைது யார் செய்யப்பட்டார்கள். நான் செல்லும் ஊர்களில் வீட்டிலாவது எனக்குச் சாப்பாடு போட்டால், அவர்கள் அடுத்த நாள் காலையில் கைது செய்யப்பட்டு, கையிலே விலங்குடன் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டு, மிசா கைதிகளாக அடைக்கப்பட்டனர். ஒரு வேதனைச் சம்பவம்! திருச்சி சிறையிலே சுப்பிரமணியம், என்ற வாலிபர் மிசாகைதி! அவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சய மாகியிருந்தது. திருமணத்திற்காகப் ‘பரோல்’ கேட்கப்பட்டது. ஒரு.. நாள் பரோல் கிடைத்தது. முதல் நாள் திருமணத்திற்கு இரவு அவர், போலீ சார் காவலுடன் வீடு போய்ச் சேர்ந்தார். மறுநாள் காலை திருமணம் நடக்கவேண்டும். திருமணத்தன்றே “முதலிரவு” ஏற்பாடு செய்திருந்தார்கள். காவலுக்குச் சென்ற போலீசார், 'முதலிரவு' நேரத்திலும் நாங்கள் அந்த அறையிலேயே இருப்போம் என்று கண்டிப்பாகக் கூறி விட்டனர். மணமகன் சுப்பிரமணியன், திருமணத் தையே ஒத்தி வைத்து விட்டு, திரும்பச் சிறைச் சாலைக்கேச் சென்றுவிட்டார், பரோலையும் ரத்துச் செய்து விட்டு! என் காரில் எனக்குத் துணையாக வந்து கொண்டி ருந்த நண்பர் உசேன் மிசாக் கைதியானார். அதன் பிறகு எனக்குத் துணையாக வந்து கொண்டி ருந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சுருளிவேல் மிசா