பக்கம்:இந்தியாவில் ஒரு தீவு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அந்தத் தீர்ப்பை எதிர்த்து பாதல், அப்பீல் செய்து கொண்டிருந்தார். ஆனால் இந்திரா காந்தி தோல்வி யடைந்து ஜனதா ஆட்சி அமைந்ததும் பாதல் மீது இருந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன. அதே போன்று பழிவாங்கும் நோக்குடன் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீதும், பிரபுதாஸ் பட்வாரி மீதும் போடப் பட்டிருந்த பரோடா வெடிகுண்டுச் சதி வழக்கும், ஜனதா ஆட்சியில் திரும்பப் பெறப்பட்டன. பாதல், பஞ்சாப்பின் முதல்வர் இப்போது! பெர்னாண்டஸ் மத்தியில் அமைச்சர்! பட்வாரி, தமிழகத்தில் மேதகு கவர்னர்! நெருக்கடிக் கால நிலை இன்னும் நீடிப்பதா? நெருக்கடிக் காலத்தில் அவதிக்கு ஆளான தமிழ் நாடும், குறிப்பாகத் தி.மு.க.வும், இன்னமும் அதே நிலை யைத்தான் அனுபவித்து வருகின்றன. இதை நினைக்கும் போது,"இந்தியாவில் தமிழ்நாடு” என்று ஒரு பெருமூச்சு விடத்தான் வேண்டியிருக்கிறது. காரணம் என்ன? நெருக்கடிக் காலத்தில், தங்கள் அதிகாரத்தை முழுமையாகவும் முரட்டுத் தனமாகவும் செலுத்தி அந்தச் சுவையை அனுபவித்த அதிகாரவர்க் கம் அந்தச் சுவையிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள விரும் பவில்லை. தி.மு.க.வின் வளர்ச்சியினால் எரிச்சலும் பொறாமை யும் கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தார், நெருக்கடி நேரத் தில் தங்கள் இடங்களை வலுப்படுத்திக் கொண்டு, நெருக் கடி தீர்ந்த பிறகும் தி.மு.க.வை எப்படியாவது செல்வாக் கற்றதாக ஆக்கிவிட வேண்டுமென்று கருதுகின்றனர்.