________________
செய்ய முடியும் என்று கருதுகிற ஒரு கூட்டம் இருக் கிறது. அந்தக் கூட்டத்தின் வால்பிடிக்க, பத பி பணத்திலே நாட்டங் கொண்ட நம்மனோர் சிலரும் துடிக் கின்றனர். அந்தக் கூட்டமும், அதன் ஏவல் கேட்டு நிற்கும் ஏமாளி வர்க்கமும்-தி. மு. க. எனும் தமிழ்ப் பேரியக் கத்திற்கு எதிராக இந்தியாவில் எல்லா இடங்களிலும் காலூன்றியிருப்பதை நம்மால் காண முடிகிறது. அவர்களுக்கிடையே நான்கு பக்கமும் வேடர் சுற்றிட நடுவில் சிக்கிய மான்போல் தி. மு. க. ஆக்கப்பட்டாலும், அது மதகரி போல் கிளர்ந்தெழுந்து-இந்திய ஜனநாயகம் வாழ-இந்தியாவில் தமிழ்நாடு தலைநிமிர்ந்து வாழ- எதிர்ப்புக்கள் எந்த வடிவுகொண்டு வரினும் அவற்றை இடரியெறிந்து பீடு நடை போடத் தவறாது! வெற்றிக் கொடி ஏற்றத் தயங்காது! சிறையிலிருந்து நாங்கள் மேற்கொள்ளும் இந்தச் சூளுரை பொய்க்காது! இந்தியாவில் தமிழ்நாட்டிக்கு ஏற்றதோர் இடல் உண்டு! அந்த ஒளிவிளக்கை ஏற்றி வைக்கும் ஆற்றம் தி.மு.கவுக்கு உண்டு! (முற்றும்)