பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இந்தியாவுக்கு ஆதரவுகள்

இடையில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் நமக்கு நம்பிக்கை அளித்து ஆதரவுகாட்டின. ‘ஆயுதங்களே முதலில் பெற்றுக்கொள்ளுங்கள் ; பண விஷயத்தைப் பின்னல் பார்த்துக் கொள்ளலாம் !’ என்று அமெரிக்காவிலுள்ள இந்திய நண்பர்கள் தெரிவித்தார்கள். திரு.நேருவும் அமெரிக்க ஜனதிபதிக்குத் தனியாகக் கடிதம் அனுப்பியிருந்தார். ‘இந்தியா எதைக் கேட்கிறதோ அதைப் பிரிட்டன் செய்யும் !’ என்று பிரிட்டிஷ் பிரதம மந்திரி திரு. மாக்மில்லன் பார்லிமென்டில் உள்ளன்போடு உவந்து கூறினர். பிரிட்டிஷ் இராணியும் ஆழ்ந்த அனுதாபம் காட்டினர். இந்தியா தன் சுதந்தரத்தைப் பாதுகாக்க மேற்கொண்டுள்ள உறுதியை மேற்கு ஜெர்மானிய அரசாங்கம் ஆதரிப்பதாக அதன் அதிபர் திரு. அடிஞர் உரைத்ததுடன், உதவி செய்யவும் தயார் என்றார்,

அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த மலாய் நாட்டுப்பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், சுதந்தர உலகம் ஒன்று சேர்ந்து கம்யூனிஸ்ட் ஆக்கிரமிப்புகளை ஒழிக்கக் கோரியதுடன், சீனக் கம்யூனிஸ்டுகளின் உண்மை உருவத்தை விளக்கி அகில இந்திய ரேடியோவில் பின்வருமாறு கூறினர் :

நாங்கள் 12 ஆண்டுக் காலம் ஆயுதம் தாங்கிய பலாத்காரத்தை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது . அதனால் நீங்கள் இப்போது அனுபவிப்பதை நாங்கள் நன்கறிவோம். அந்த அபாயக் காலத்தில் கம்யூனிஸ்டுகள் பிறரைப் போலவே சீனரையும் கொன்றனர். கொரியாவில் கம்யூனிஸ்டுகள் என்ன செய்தனர் என்பது உங்களுக்குத் தெரியும். திபேத்தைக் கவர்ந்தார்கள். போரினல் ஏற்பட்ட வியட்னாமின் துயரங்களுக்குக் கம்யூனிஸ்டுகளே காரணம். லாவோஸில் பூசலும் கவலை

100