பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 வுக்குச் சொந்தமாயிருந்த பிரதேசங்களே மீட்டுக் கொள்ளல். நான்காவது வேலை ஆசியாவின் தலைமைப் பதவியைப் பெறுதல். ஐந்தாவது வேலை ஆசிய ஆப்பிரிக நாடுகளிலும், தென் அமெரிக்காவிலும், சமயமும் சந்தர்ப்பமும் கிடைப்பதற்கு ஏற்றபடி, கம்யூனிஸத்தைப் பரப்பிச் செல்வாக்குப் பெறுவதுடன், ஐரோப்பாவிலும் காலூன்றிக் கொள்ளல். உலக சமாதானம், சமாதான சக வாழ்வு முதலிய கோஷங்களை வாயால் சொல்லிக்கொண்டு, வசதி கிடைக்கும் இடங்களிலெல்லாம் புகுந்து போரிட்டுக் கொண்டேயிருக்கவேண்டும். அணுகுண்டுகளையும் ஏவுகணைகளையும் எண்ணி மூன்றாவது உலகப்போருக்கு அஞ்சிக் கொண்டிராமல், அமெரிக்காவுடனும் மற்ற முதலாளித்துவ நாடுகளுடனும் பொருதிக்கொண்டேயிருத்தல் ஆறாவது வேலை. இதுவரை கம்யூனிஸ்ட் சீனா பின்பற்றி வந்துள்ள கொள்கைகளைப் பார்க்கும் போது இக்குறிக்கோள்கள் தெளிவாகத் தெரிகின்றன.

சீனக் கம்யூனிஸ்ட் ஆட்சி முறையில் கம்யூனிஸம் மட்டும் ஏற்பட்டிருப்பதாகக் கருதக் கூடாது. நாட்டின் சுதந்தரமும் அதனால் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. போர் வெறி பிடித்த பிரபுக்களின் கொட்டம் ஒடுங்கி இராஜ்யங்கள் ஐக்கியப்பட்டன. அரசியல் ஒரே ஒழுங்கு முறையில் நடைபெறத் தொடங்கிற்று. சென்ற 150 ஆண்டுகளாகப் பிறநாடுகளால் ஏற்பட்டு வந்த அவமானங்கள் யாவும் மறைந்து, கம்யூனிஸ்ட் சீனாவின் தூதர்களுக்கு எங்கும் மரியாதை ஏற்படலாயிற்று. கம்யூனிஸத்துடன் தேசப்பற்றும், தேசிய வெறியும் கலந்து விளங்குவதே இன்றைய கம்யூனிஸ்ட் சீனா. நாட்டின் நன்மைக்காக, மேன்மைக்காக, வளர்ச்சிக்காகக் கம்யூனிஸ்ட் ஆட்சியைச் சீனமக்கள்

147