பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முதல் 9 ஆண்டுகளில் இத்தகைய ஆலோசனைத் திட்டங்கள் மூன்று கோடிக்குமேல் கிடைத்திருக்கின்றன.

சீனாவுக்குச் சென்று வந்தவர் பலரும் ஒரு விஷயத்தை வற்புறுத்திச் சொல்லி யிருக்கின்றனர்; கோடிக்கணக்கான நாட்டு மக்கள் அனைவரும் வேலை செய்துகொண்டே யிருக்கின்றனர் என்பதுதான் அவ்விஷயம். பீகிங்கிலும், மற்றும் பல பெரிய நகரங்களிலும், இரவு முழுதும் பொது மின்சார விளக்குகளை அணைக்காமல், இரவிலும் வேலை நடந்து வருகின்றது. புதிய ஆலைகள், நாடக அரங்குகள், வீடுகள், சாலைகள் முதலியவைகளை மக்கள் அமைத்துக்கொண்டே யிருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் 8 மணி நேர வேலைக் கணக்கில், உழைப்பாளர்கள் பகலிலும் இரவிலும் மூன்று கூட்டங்களாகச் சென்று தொழில் செய்கின்றனர். நாட்டின் அளவுக்கும் பெரிய ஜனத் தொகைக்கும் சீன அடைந்துள்ள முன்னேற்றங்கள் பிரமாதமில்லை என்று தோன்றலாம். ஆயினும் குறுகிய கால அளவில் அது முடித்துள்ள சாதனைகள்யாவும் வியப்புக்குரியவையே. ஆண்களோடு பெண்களும் இலட்சக்கணக்கில் வெளிவந்து வேலை செய்கிறார்கள் . எல்லோரும் ஏதாவது பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். மெளனமாகச் சும்மா இருக்கும் சுதந்தரம்கூடச் சீனாவில் இல்லையென்று ஒருவர் கூறியுள்ளார்! தொழில்களிலே பின்தங்கிய நாடுகள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்துதான் பல நூற்றாண்டுகளைத் தாண்டவேண்டியிருக்கிறது!

முன்னேற்றமா, பின்னேற்றமா ?

பெரிய பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றப் பலாத்காரமும் சர்வாதிகாரமும் அவசியம் என்று பலர் தவறாகக் கருதுகின்றனர். ஸோவியத் ரஷ்யாவின்

155