பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முன்னேற்றமும், கம்யூனிஸ்ட் சீனாவின் வளர்ச்சியும் சர்வாதிகாரத்தின் சாதனைகள் என்று கருதப்படுகின்றன. சர்வாதிகாரமுள்ள ஒரு கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த வேகத்தில் சில திட்டங்களை நிறைவேற்ற முடிகிறது என்றால், அந்த வெற்றியின் விலை என்ன என்பதையும் கவனிக்க வேண்டும். முதலில் இலட்சக் கணக்கான மக்கள் பவியிடப்படுகிறார்கள். பின் லட்சக்கணக்கான மக்கள் ஆடு மாடுகளைப் போல் விவசாய நிலங்களுக்கோ, தொழிற்சாலைகளுக்கோ விரட்டப் படுகிறார்கள். வேலை நேரம், ஊதியம், மற்ற வாழ்க்கை வசதிகள்-எதைப்பற்றியும், எவரும் எதிர்த்துப் பேச உரிமை கிடையாது. தேசத்திற்காகவோ, கம்யூனிஸ்ட் இலட்சியத்திற்காகவோ, யாவரும் எல்லாவிதத் தியாகங்களையும் செய்தாக வேண்டும். ஒரு சமுதாயத்தில் மக்கள் அனைவரும் தங்கள் மனிதத் தன்மையையே இழந்து விட்டுத் திட்டங்களில் வெற்றி பெறுகிறார்கள் என்றால், அந்த வெற்றியின் மதிப்பு எவ்வளவு ?

1958-இல் மாஸே-துங்கின் கட்டளைப்படி சீனாவில் விவசாயக் ‘கம்யூன்கள்’ அமைக்கப்பட்டன. வேலை செய்ய முடியாத வயோதிகர்களுக்கும் குழந்தைகளுக்கும் தனி இல்லங்கள் அமைக்கப்பட்டன. அவர்கள் குடும்பங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். குடும்பங்களே உலைக்கப்பட்டு, இலட்சக்கணக்கான ஆடவரும் பெண்களும் வெவ்வேறு கம்யூன்களில் சேர்க்கப்பட்டனர். ஊண், உறக்கம், வேலை-எல்லாம் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்தே நடந்தன. 26,000 கம்யூன்கள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. யாவரும் கம்யூன்களிலேயே தங்கியிருக்க வேண்டும். கணவர்கள் தங்கள் மனைவியரைச் சந்திப்பதற்கு வாரத்தில் ஒரு நாள்-சனிக்கிழமையன்று-சில நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டார்கள்! மனைவி, மக்கள், பெற்றாேர், சுதந்தர

156